“அதோட இத சம்பந்தபடுத்தாதீங்க”! நோயாளிகள் உயிரிழப்பு குறித்து பதிலளிக்கும் மருத்துமனை டீன்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரை அரசு மருத்துவமனையில் மின்சாரம் தடைபட்டதால் சிகிச்சை பெற்றுவந்த ஐந்து பேர் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.

மதுரையில் நேற்று கனமழை பெய்ததால் நகரின் பல்வேறு பகுதியில் மின்சாரம் தடைபட்டுள்ளது. இந்நிலையில், விபத்துக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஐந்து பேர் மின்சாரம் இல்லாததால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மதுரை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சசிமோகன் மற்றும் அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா ஆகியோர்  நடத்திய விசாரணையில் இறந்த ஐந்து பேருமே ஒரே நேரம் இறக்கவில்லை என்று கூறினார்.

மேலும், மின்சாரம் தடைபட்டபோது யாருடைய சுவாசமும் நிற்கவில்லை எனவும் குறிப்பிட்டார். இந்நிலையில், சிகிச்சை பெற்ற வந்த ஐந்து பேரும் இயற்கை மரணம் அடைந்ததாக மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.

MADURAI, GOVERNMENT HOSPITAL, PATIENTS, DIED, POWER FAILURE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்