‘விபத்தில் தப்பித்தவர்களுக்கு அடுத்த நொடி காத்திருந்த பயங்கரம்..’ 3 பேர் உயிரிழந்த சோகம்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்அதிகாலையில் ஒசூர் கிருஷ்ணகிரி சாலையில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சூளகிரி அருகே சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்றின் முன்பக்க சக்கர இணைப்புகள் மொத்தமாக கழன்று ஓடியதால் பேருந்து சாலையின் தடுப்பில் மோதி நின்றுள்ளது. இதனால் பதற்றமடைந்த பயணிகள் வேகமாக பேருந்திலிருந்து இறங்கியுள்ளனர். அதிகாலை இருட்டில் சாலையில் இருந்த ஆபத்தைக் கவனிக்காமல் பயணிகள் சாலையைக் கடந்துள்ளனர்.
அப்போது அந்த சாலையில் மற்றொரு அரசுப் பேருந்து வந்துள்ளது. அதன் ஓட்டுநர் இதைக் கவனித்து அவர்கள் மீது மோதாமல் இருக்க பிரேக் அடித்து பேருந்தை நிறுத்த முயன்றுள்ளார். இதனால் அதன் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி நிற்க முயன்ற பேருந்தின் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் கட்டுப்பட்டை இழந்த பேருந்து சாலையைக் கடக்க முயன்றவர்கள் மீது மோதியதில் 3 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இரண்டாவதாக வந்த பேருந்தில் பயணம் செய்தவர்களில் 15க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர். பேருந்து மீது மோதிய லாரியில் இருந்த ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகியோரும் படுகாயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதில் உயிரிழந்தவர்கள் 3 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தாறுமாறாக சென்ற கார் மோதி பெண் உட்பட 4 பேர் தூக்கிவீசப்பட்ட கோர விபத்து..! சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!
- 'கோயிலுக்கு போனபோது நேர்ந்த விபரீதம்'... 'பேருந்து தீப்பிடித்ததால் பரபரப்பு'!
- இயந்திர கோளாறால் அவரசமாக தரையிறக்கப்பட்ட விமானம் விபத்து..! அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ!
- 'மகளின் திருமண பேச்சுக்காக சென்றவரும் கண்ணாடியை உடைத்துக்கொண்டு சாலையில் விழுந்து பலி’.. விபத்தான அரசுப்பேருந்தால் சோகம்!
- 'இரு லாரிகளுக்கிடையே சிக்கிய மினி லாரி' ... 'அடுத்தடுத்து லாரிகள் மோதி நேர்ந்த சோகம்'!
- ‘எக்ஸ்பிரஸ்வேயில் லாரி மீது பேருந்து மோதிய சம்பவம்’!.. பயணிகளுக்கு நேர்ந்த கொடூரம்!
- 'ஜஸ்ட் மிஸ்..' கரகரவென்று சுற்றிய கார்.. உயிரைக் காப்பாற்றிய சீட் பெல்ட்!
- 'விஷத்தை எடுக்க வாயில் பொருத்திய கருவி'... 'வெடித்து பெண்ணுக்கு நேர்ந்த சோகம்'!
- 'மினி லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து'... '6 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி'!
- 'வைத்தியம் பாக்க தானே'...'என் பொண்ணு போச்சு'...'இளம் டாக்டர்'க்கு நிகழ்ந்த பரிதாபம்!