நாகையில் 'ஜாலியாக' சுற்றித்திரியும் முதலைகள்... எங்க 'நம்மள' கடிச்சிருமோ?.. அச்சத்தில் பொதுமக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருக்குரகாவல் கிராமத்தில் உள்ள பழவாற்றில் 3 முதலைகள் சுற்றி வருவதால் பொதுமக்கள் அங்குள்ள ஆற்றை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். முதலில் 2 முதலைகள் இருந்ததாகவும், தற்போது 3 முதலைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆற்றின் அருகில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் ஒன்று உள்ளது. அந்த கோயிலுக்கு வரும் பக்தர்களும் ஆற்றை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கால்நடைகள் நீர் அருந்த முடியாமலும், அவற்றை குளிப்பாட்ட முடியாமல் மக்களும் தவித்து வருகின்றனர். எனவே இந்த முதலைகளை பிடித்து ஆற்றில் விடவேண்டும் என பொதுமக்கள் வனத்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்