கொஞ்சம் நேரம் முன்னாடிதான் ஒரு 'கோல்டு செயின்' அடிச்சோம்...! 'இதே வேலையாதான் சுத்திட்டு இருந்துருக்காங்க...' வசமாக வந்து சிக்கிய கொள்ளையர்கள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சாலையில் வருபவர்களை வழி மறித்து பல லட்சங்கள் சேர்த்து வைத்த திருடர்களை தனிப்படை போலீசார் பொள்ளாச்சியில் கைது செய்துள்ளனர்.

பொள்ளாச்சியின் பல்லடம் சாலையில் நெகமம் போலீஸார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவ்வழியே   கேடிஎம், டியுக் பைக்கில் சென்ற  இரண்டு பேரிடம் எப்போதும் போல போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது பைக்கில் வந்த இருவரும் தடுமாற்றம் அடைந்து மாறி மாறி பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. கொஞ்சம் நேரம் முன்பு தான் இருவரும், சூலூர் வலசுபாளையத்தில் நடந்து வந்த பெண்ணிடம் கத்தியைக் காண்பித்து 2 சவரன் தங்கச் செயினைப் பறித்து பொள்ளாச்சி செல்ல இந்த சாலையில் வந்ததாக தெரிவித்தனர். விசாரணையில் அவர்கள் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கிஷோர், தஞ்சாவூரைச் சேர்ந்த சிவப்பிரகாசம் என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் 2019-ம் ஆண்டு முதல் இதையே ஒரு வேலையாக பண்ணிக்கொண்டு பல்வேறு வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

காரமடையில் நடந்துசென்ற பெண்ணிடம் 6 சவரன் தங்கச் செயின், பெரியநாயக்கன்பாளையம் அமஞ்சி நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 சவரன் தங்க செயின் பறிப்பு, செல்வகணபதி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 16 சவரன் நகைகள் கொள்ளை என்று இவர்கள் 14-க்கும் மேற்பட்ட வழிப்பறி மற்றும் திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

அதை தவிர அவர்களிடம்  80 சவரன் நகைகள், ஒரு  கார், ரூ.70,000 ரொக்கம் என்று ரூ.25 லட்சம் மதிப்பிலான திருட்டுச் சொத்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சிவப்பிரகாசம் மற்றும் கிஷோர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

GOLD, THIEF

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்