‘எப்போ வேணாலும் பிரசவ வலி வரலாம்’.. தீவிர கண்காணிப்பில் 1482 கர்ப்பிணிகள்.. தயார் நிலையில் 108 ஆம்புலன்ஸ்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

எப்போது வேண்டுமானாலும் பிரசவம் நிகழும் என்ற நிலையில் உள்ள 1482 கர்ப்பிணி பெண்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக திருச்சி மாவட்ட சுகாதரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1 லட்சம் பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவை பொருத்தவரை கொரோனா பாதிப்பால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். 512 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் பிரசவம் நிகழும் நிலையில் உள்ள 1482 கர்ப்பிணிகள் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக திருச்சி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கர்ப்பிணிகளை அழைத்து வர 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசவ வலி ஏற்படும் பெண்களை கொரோனா வார்டு அமைந்துள்ள மருத்துவமனைகளில் சேர்க்காமல் நகர் நல மையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் இதர மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

PREGNANT, WOMEN, TRICHY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்