'ஐபோன் வாங்கிக்கொடுத்து கெத்து காட்டணும்டா...' 'காதலிய இம்ப்ரஸ் பண்ண போட்ட பிளான்...' - கொஞ்ச நேரத்துலையே எல்லாமே தவிடு பொடியாகிடுச்சு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தூத்துக்குடி மாவட்டம், ரோச் காலனியில் வசித்து வந்தவர் ஆஷா. கடந்த பிப்ரவரி மாதம் ஆஷா சாலையில் செல்லும் போது பைக்கில் வந்த மர்மநபர்கள், அவர் அணிந்திருந்த 17 சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து ஆஷா, காவல்நிலையத்தில் புகார் அளித்தத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, வழிப்பறிக்கு கேடிஎம் பைக்கின் புதிய மாடலை திருடன் பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது.

அதன்பின் அந்த திருடரே தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோடு பகுதியில் வந்த நின்றிருந்த போலீசாரைக் கண்டு பயந்து தப்பிச்செல்ல முயன்றுள்ளனர். இதனை கண்ட போலீசார் அவர்களின் திருட்டு முழியை வைத்து, அவர்களை மடக்கி விசாரித்ததில், தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சேர்ந்த நயினார் என தெரியவந்தது.

மேலும் தீவிர விசாரணைக்கு பின் இவர்கள் தான் ஆஷாவின் 17 சவரன் செயினை பறித்தவன் என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார். நயினாரை கைது செய்த போலீசார் தற்போது சிறை பிடியில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது தான் காதலிக்கு ஐபோன் வாங்கி தருவதற்காக பெண்ணிடம் நகையை பறித்ததாக ஒப்புக் கொண்டார்.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்