‘டிக்டாக்’ வீடியோவால் ஏற்பட்ட தகராறு.. தூத்துக்குடி இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோயில் நிர்வாகம் செய்வதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் அடுத்த மாதா நகரை சேர்ந்தவர் ரவி. இவர் அப்பகுதியில் உள்ள சந்தன மாரியம்மன் கோயிலில் தர்மகர்த்தாவாக பதவி வகித்து வந்துள்ளார். அதே கோயிலில் பொருளாளராக ரத்தினக்குமார் என்பவர் இருந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, இரண்டு கோஷ்டிகளாக செயல்பட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் ரத்தினக்குமாரின் ஆதரவாளரான செல்வம் என்பவரது வீட்டில் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றுள்ளது. அப்போது ரவியின் ஆதரவாளரான பார்த்தசாரதி, செல்வத்தின் வீட்டிற்கு அருகே பைக்கை நிறுத்தியுள்ளார். இதனை செல்வம் படமெடுத்து டிக்டாக்கில் அவதூறாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்தசாரதி கண்டித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அந்த சமயம் அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் செல்வம், உட்பட 3 பேரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளது. படுகாயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் செல்வம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்