‘ஆண் நண்பர்களுடன் சேர்ந்து’.. ‘இளம்பெண் செய்த நடுங்க வைக்கும் காரியம்’.. ‘கணவருக்கு நேர்ந்த கொடூரம்’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆண் நண்பர்களுடன் சேர்ந்து இளம்பெண் ஒருவர் இரண்டாவது கணவரைக் கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேந்தவர் ராஜபாண்டி (51). இவருக்கு 2 மனைவிகளும், 2 குழந்தைகளும் உள்ளனர். கார் புரோக்கரான இவர்மீது பல வாகனத் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இவருக்கு சமீபத்தில் சித்ரா (20) என்ற ஏற்கெனவே திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் தூத்துக்குடியில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்துள்ளனர்.
அந்த சமயத்தில் ராஜபாண்டியின் நண்பர்களான ராமர், சக்திவேல் ஆகியோர் இவர்களுடைய வீட்டிற்கு அடிக்கடி வந்துசென்றுள்ளனர். அப்போது சித்ராவுக்கும், ராமருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த ராஜபாண்டி சித்ராவைக் கண்டித்துள்ளார். சம்பவத்தன்று இதுதொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ராஜபாண்டி சித்ராவைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து நடந்த தகராறில் சித்ரா, ராமர், சக்திவேல் ஆகிய 3 பேரும் சேர்ந்து ராஜபாண்டியின் தலையைத் துண்டித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர் அவர்கள் ராஜபாண்டியின் தலையை புதியம்புத்தூரில் உள்ள கிணற்றிலும், உடலை கீழத்தட்டப்பாறை பகுதியிலுள்ள கல் குவாரியிலும் வீசியுள்ளனர்.
இதையடுத்து ராஜபாண்டியின் உடலைக் கைப்பற்றிய போலீஸார் நடத்திய விசாரணையில் நடந்த உண்மைகள் தெரியவந்துள்ளன. இதையடுத்து சித்ரா மற்றும் ராமரைக் கைது செய்துள்ள போலீஸார் மேலும் இதில் தொடர்புடைய மற்றொரு நபரான சக்திவேலைத் தேடி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கலப்புத்திருமணம்’!.. ‘4 வருஷம் தலைமறைவு’! சொந்த ஊருக்கு வந்த காதல் தம்பதியை கல்லால் அடித்துக் கொன்ற ஊர்மக்கள்..!
- ‘அவரு நல்லாதான் இருக்காரு’.. ‘போலீஸாரிடம் நாடகமாடிய மனைவி’.. ‘ஆண் நண்பருடன் சேர்ந்து செய்த அதிரவைக்கும் காரியம்’..
- 'லிஃப்ட் கொடுத்து'.. 'ஓடும் காரில் பலாத்காரம் '.. 'ரோட்டில் வீசப்பட்ட பெண்'.. பதறவைக்கும் சம்பவம்!
- 'ஆடிப்பாடி' டிக் டாக் செய்த மனைவி.. 'தலைக்கேறிய' ஆத்திரம்.. கழுத்தை நெரித்து 'கொன்ற' கணவர்!
- ‘2 நிமிடத்தில்’.. ‘இளம்பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்’.. ‘ஒரே நாளில் மாறிய வாழ்க்கை’..
- 'மனநல சிகிச்சை பெற வந்தபோது’... ‘சிறுவர்களால்’... ‘இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்’!
- ‘சுற்றி பார்க்க வந்தபோது’... 'நொடியில் 100 அடி பள்ளத்தில்'... 'வேன் கவிழ்ந்து நேர்ந்த பரிதாபம்'!
- ‘தற்கொலை எனக் கூறப்பட்ட நிலையில்’.. ‘இளம்பெண்ணின் பிரேதப் பரிசோதனையில்’.. ‘வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்கள்’..
- 'பறந்துவந்து விழுந்த பாட்டில்'.. 'பற்றி எரிந்த பெண் காவலர்கள்'.. 'பதைபதைப்பு சம்பவம்'!
- ‘திருமணமான ஐந்தே நாளில் நடந்த சோகம்’.. ‘அதிர்ச்சியில் உறைந்துபோன குடும்பத்தினர்’..