கணவருக்கு வந்த 'போன்'... 'கஷாயத்தில்' மயக்க மருந்து... 'நாடகமாடிய' மனைவி 'கடைசியில்' கொடுத்த 'ஷாக்'... 'மிரளவைக்கும்' சம்பவம்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடியில் நகை கொள்ளை போனதாக நாடகம் ஆடிய துறைமுக ஊழியரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள பெரியசெல்வம் நகரை சேர்ந்த தம்பதி வின்சென்ட் சவேரியார் பிச்சை - ஜான்சி ராணி. இவர்களுடைய 2 மகள்களும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுடைய வீட்டு பீரோவில் இருந்த சுமார் 100 பவுன் நகைகள் மற்றும் ரூ 20 ஆயிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டதாக வின்சென்ட் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது ஜான்சி ராணி முன்னுக்குபின் முரணாகவே பதிலளித்து வந்ததால் போலீசாருக்கு அவர்மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. விசாரணையில், ஜான்சி ராணி நடத்தி வந்த சீட்டு தொடர்பாக அவருக்கு கடன் பிரச்சனை இருந்துவந்ததும், கணவர் கஞ்சத்தனத்தால் அவருக்கு உதவாததால் நகைகளைத் திருடி விற்று, கடனை அடைக்க திட்டமிட்டு அவர் நாடகமாடியதும் தெரிய வந்துள்ளது.
மேலும் நகைகளைத் திருட திட்டமிட்ட ஜான்சி ராணி வேறு ஒரு எண்ணில் இருந்து கணவருக்கு போன் செய்து ஊரடங்கால் பேங்க் லாக்கரில் உள்ள நகைகளுக்கு பாதுகாப்பில்லை எனக் கூறி நகைகளை வீட்டிற்கு எடுத்து வர வைத்துள்ளார். பின்னர் சம்பவத்தன்று கபசுர கஷாயத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்த அவர், கணவர் மயங்கியதும் நகைகளைத் திருடி வீட்டின் முன் உள்ள காலி இடத்தில் புதைத்து வைத்துள்ளார். இதையடுத்து புதைத்த இடத்திலிருந்து நகைகளை மீட்ட போலீசார் ஜான்சி ராணியை கைது செய்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "நான் கொரோனாவை விட பயங்கரமானவன்" கைகளில் 'தடியுடன்' இருந்த 'போலீசார்' முன்னிலையில்... 'வீரவசனம்' பேசிய 'இளைஞருக்கு' நேர்ந்த 'பயங்கர பின்விளைவுகள்...'
- ‘கடையில யாரும் இல்ல'... 'அந்த மனசு தான் சார் கடவுள்'... சலுயூட் போட வைத்த 'கோவை' மக்கள்!
- 'தமிழகத்தில்' கொரோனாவால்... 'ஒரே நாளில்' 2 பேர் 'உயிரிழப்பு'... 3 ஆக 'உயர்ந்த' பலி எண்ணிக்கை...
- கொரோனா எதிரொலியாக... வீட்டிற்குள் முடங்கி இருப்பதால்... அதிகரித்த குடும்ப சண்டைகள்!... தேசிய மகளிர் ஆணையம் பகீர் தகவல்!
- 'பெண்களை விட ஆண்களை அதிகமாக கொன்று குவித்த கொரோனா!'... என்ன காரணம்?... பிரம்மிக்கவைக்கும் ஆய்வு முடிவுகள்!
- 'கொரோனா தொற்று'...'யாரும் போக முடியாது'...'புரசைவாக்கம் உட்பட 8 முக்கிய இடங்களுக்கு ‘சீல்’!
- 'இது தான் 'கொரோனா குடை'யாம்!... அப்படி இதுல என்ன தான் இருக்கு!?'... பீகார் இளைஞரின் புது ஐடியா!
- 'உலகமே நம்ம மேல காண்டுல இருக்கு'... 'இதுல நீங்க வேற'...சீன இளைஞருக்கு கிடைத்த அதிரடி தண்டனை!
- 'கொரோனா டெஸ்ட்ல 'நெகட்டிவ்'னு வந்தா... கொரோனா இல்லனு அர்த்தம் இல்ல!'... தமிழக சுகாதார செயலர் பீலா ராஜேஷ் விளக்கம்!
- ‘அம்மா இறந்திட்டாங்கன்னு போன் வந்தது’.. ‘லீவ் குடுத்தும் நான் ஊருக்கு போகல’!.. கண்கலங்க வைத்த காரணம்..!