“கொஞ்சம் இருங்க வந்துருவாரு!”.. “தூத்துக்குடி ஆட்டு சந்தையில் நடந்த”.. “தரமான சம்பவம்!”

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தளவாய்புதூரைச் சேர்ந்த விவசாயி அழகுவேல். 75 வயதான இவர் ஆடுகளை வளர்த்து பராமரித்து வருகிறார்.  மேய்ச்சலுக்கு அடிக்கடி ஆடுகளை அழைத்துச் சென்று வரும் இவருடைய பட்டியில் இருந்து அண்மையில் 2 கிடாக்கள் காணாமல் போனதால் ஊரெல்லாம் தேடியுள்ளார். ஆடு காணாமல் போய்விட்டதாக திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.

இதனைடையே, தன் ஊருக்கு அருகில் உள்ள ஆறுமுகநேரியில் இருக்கும் ஆட்டுச் சந்தைக்கு சென்று தேடும்போது, இவரது 2 ஆடுகளையும் வேறொருவர் கையில் பிடித்துக்கொண்டு நின்றிருந்துள்ளார். அவரிடம் கேட்டபோது, அவரும் அவரது நண்பரும் அந்த சந்தையில் 5 ஆடுகளை ஒருவரிடம் இருந்து ரூ.24,500க்கு விலைக்கு வாங்கியதாகவும், பணம் குறைவாக இருந்ததால், தன்னுடைய நண்பர் பணம் எடுத்துவர சென்றிருப்பதாகவும், கொஞ்ச நேரத்தில் அவரும் வந்துவிடுவார், ஆட்டை விற்றவரும் வந்துவிடுவார் நீங்களே விசாரித்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

இதனால் அதிர்ந்த அழுகுவேல் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். போலீஸும் வர, ஆடுகளை திருடியவரும் வந்தார். அவரை கையும் களவுமாக பிடித்தபோதுதான், அவரது பெயர் ரூபன் என்பதும், அவர் அழகுவேலின் 2 ஆடுகளையும் ரூ.5,500க்கு விற்றதும் தெரியவந்தது. இதுபற்றி பேசிய அழகுவேல், ‘ஆடுகளை பிள்ளை மாதிரி வளத்துட்டு வரேன். ஒரு ஆடு கணக்குல கொறைஞ்சாலும் கண்ணுல தூக்கம் வராது. ஆனா, என்னமோ அவனே வளத்த மாதிரி ஆடுகளை வெலை பேசி வித்திருக்கான் அந்த பய’ என்று ரூபனை சாடினார்.

SHEEP, THOOTHUKUDI, SHEPHERD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்