'ஒழுங்கா என்கூட வாழு...' 'அப்படியொரு கல்யாணமே நடக்கல...' 'அப்போ எப்படி மேரேஜ் சர்டிபிக்கேட்...? - அதிர்ச்சியில் உறைந்த இளம்பெண்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் ஒன்றை செய்துள்ளார்.
அந்த மனுவில், " நான் +2 படிக்கும்போது டார்வின் என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் என்னை ஒருதலையாக காதலித்தார். +2 முடித்து நான் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.டெக் படிப்பதற்காக சேர்ந்தேன். தற்போது டார்வின் தன்னுடன் சேர்ந்த வாழுமாறு கட்டாயப்படுத்தி வருகிறார்.
டார்வினுக்கும், எனக்கும் தூத்துக்குடி லூர்தம்மாள் ஆலயத்தில் 08-08-2017-ல் திருமணம் நடைபெற்றதாக கீழுர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்து சான்றிதழ் பெற்றிருப்பதாக தெரிவித்தார்.
இதுகுறித்து தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், கீழுர் சார்பதிவாளர் அலுவலகத்தில் தகவல் பெற்றபோது, போலி ஆவணங்களை பயன்படுத்தி லூர்தம்மாள் ஆலயத்தில் எனக்கும், அவருக்கும் திருமணம் நடைபெற்றதாக கூறி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருப்பது தெரியவந்தது.
ஆவணங்களுடன் ஆலைய பங்கு தந்தையின் சான்றிதழும் இணைக்கப்பட்டிருந்தது. அதுகுறித்து பங்கு தந்தையிடம் விசாரித்தபோது, சான்றிதழில் குறிப்பிட்டிருக்கும் தினத்தில் ஆலயத்தில் அப்படியொரு திருமணம் நடைபெறவில்லை என்றும், அதுபோன்ற சான்றிதழை தான் வழங்கவில்லை என்றும் தெரிவித்தார். போலி சான்றிதழ்களை பயன்படுத்தி எனக்கும், அவருக்கும் திருமணம் நடைபெற்றதாக பதிவு செய்துள்ளார் டார்வின்.
மேலும், திருமணம் நடைபெற்றதாக கூறப்படும் அந்த தினத்தில் நான் தூத்துக்குடியில் இல்லை. கல்லூரியில் செய்முறை தேர்வில் (Practical Exam) பங்கேற்றேன். அதற்கான ஆன்லைன் வருகை பதிவேடு உள்ளது. இருப்பினும் போலி திருமணப்பதிவு அடிப்படையில் தன்னுடன் வந்து வாழுமாறு டார்வின் ஜனவரி மாதம் முதல் என்னை மிரட்டி வருகிறார். எனவே கீழுர் சார்பதிவாளர் அலுவலகத்தில் வழங்கப்பட்ட திருமண பதிவு சான்றிதழை ரத்துசெய்ய மாவட்ட பதிவாளரிடம் மனு அளித்தேன். அவர் என் மனுவை நிராகரித்துவிட்டார்.
ஆகவே, கீழுர் சார்பதிவாளர் வழங்கிய திருமண பதிவு சான்றிதழை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், "மனு தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட பதிவாளர், கீழுர் சார்பதிவாளர் மற்றும் டார்வின், புன்னைக்காயர் புனித சேவியர் ஆலய பங்குதந்தை பிராங்கிளின் ஆகியோர் வரும் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'காதலிச்சிட்டு எப்படி விட முடியும்'...'சொல்லி பாத்தோம், எங்க வீட்டுல ஒத்துக்கல'... காதலர்கள் எடுத்த அதிரடி முடிவு!
- 'கல்யாணத்திற்கு முன் ஷாக் கொடுத்த காதலி'... 'ஆனாலும் இதுதான் என் வாழ்க்கையோட மகிழ்ச்சியான நாள்!!!'... 'கடைசியில் காத்திருந்த ஹேப்பி டிவிஸ்ட்!'...
- மண்டபம் ஃபுல்லா ‘சீர்வரிசை’.. என்னது இவ்ளோ ரூபாயா..! மிரண்டுபோன சொந்தக்காரர்கள்.. மதுரையை திரும்பி பார்க்க வைத்த கல்யாணம்..!
- 'திருமணமான பெண்ணை தூக்க ஃபிளைட் புடிச்சு போன ஆட்டோக்காரர்'... ஊருக்குள் போனதும் காத்திருந்த ட்விஸ்ட்!
- 'பக்கா பிளானோடு...' 'மூணு மாசத்துல மூணு திருமணம்...' '15 நாள்ல ஆள் எஸ்கேப்...' - அதிர வைக்கும் பகீர் பின்னணி...!
- “குடும்பத்தச் சேர்ந்தவங்க வாட்ஸ் ஆப் குரூப்ப விட்டே போய்ட்டாங்க! ஃபோட்டோக்களை நீக்க சொல்றாங்க! ஆனால்..”.. சர்ச்சை போட்டோஷூட் விவகாரத்தில் புதுப்பெண் கூறிய ‘அதிரடி பதில்!’
- “மெயின் டியூட்டியே இதுதான்.. அன்னைக்கு கூடுதலா அதையும் சேத்து செஞ்சிட்டேன்!”.. கல்யாண வீட்டில் உறவினர் போல் நடித்து ‘மொய்ப் பணத்தை’ அபேஸ் செய்த நபர் சிக்கினார்!
- 'காதலன் ஒருமணி நேரத்துல வருவார்னு சொன்னது...' 'எல்லாமே பொய், டிராமா...' - திருமணத்தை தடுத்து நிறுத்திய சம்பவத்தில் அதிரடி திருப்பம்...!
- அடேய்...! 'உங்ககிட்ட போய் வந்து சேர்ந்தேன் பாரு...' 'அப்படின்னு கொரோனாவே நினைக்குற அளவுக்கு...' - வைரலாகும் 'வேற லெவல்' திருமண போஸ்டர்...!
- '10 முறை கல்யாணம்'... 'திருப்தி இல்லாததால் அனைத்து கணவர்களுடன் விவாகரத்து'... அடுத்த திருமணத்திற்கு போட்டுள்ள கண்டிஷன்!