இந்த கரன்சி வச்சு என்ன பண்ண திட்டம்...? 'அந்த நாடு இத 14 வருஷம் முன்னாடியே...' - விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சிகர தகவல்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தூத்துக்குடி தெர்மல் நகரில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கே கையில் பையுடன் சந்தேகத்திற்கிடமான வகையில், சுற்றித் திரிந்த ஐந்து வாலிபர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர்கள் வைத்திருந்த பையை பரிசோதனை செய்தபோது, அதில் வெளிநாட்டுக் கரன்சி இருந்தது தெரியவந்தது. உடனே அவர்களை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களின் விவரம், கோவையைச் சேர்ந்த ஜீவா, தென்காசி மாவட்டம் சுரண்டைப் பகுதியின் விஜய மாணிக்கம், அதன் பக்கத்திலுள்ள கடையநல்லூரைச் சேர்ந்த முகம்மது புகாரி, முகம்மது ஸ்ரிவான், முகம்மது அஸ்கர் உள்ளிட்ட ஐந்து பேர்கள் என தெரிய வந்திருக்கிறது. மேலும், அது துருக்கி நாட்டின் இரண்டு கோடி மதிப்பிலான 40 கரன்சி நோட்டுக்கள் எனவும் ஒரு கரன்சியின் இந்திய மதிப்பு ரூ.5 லட்சம் மதிப்புள்ளது எனவும் தெரியவந்திருக்கிறது.

அந்தக் ரூபாய் நோட்டுகள் பற்றி தீவிரமாக விசாரித்ததில், துருக்கி நாட்டின் அந்தக் கரன்சியை அந்நாடு 2006-ம் ஆண்டே அந்நாடு பணமதிப்பிழப்பு செய்துள்ளது எனத் தெரியவந்திருக்கிறது. மேலும், அவர்களது விசாரணையில், தென் மாவட்டத்தில் ஹவாலா பணம் மற்றும் வெளிநாட்டுக் கரன்சிகளின் டீலிங்கில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது. அவர்களின் மூலம் மிகப் பெரிய அளவில் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட திட்டம் ஏதேனும் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணையை மாவட்ட எஸ்.பி.யான ஜெயக்குமார் தீவிரப்படுத்தியிருக்கிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்