சுதந்திரத்திற்கு பிறகு ஊருக்குள் வரும் முதல் பேருந்து.. வாரிக் கட்டியணைத்து வரவேற்ற கிராமத்தினர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் உள்ள கிராமம் ஒன்று சுதந்திரத்திற்கு பிறகு முதல் பேருந்தை கொண்டாட்டத்துடன் வரவேற்றிருக்கிறது. இதனிடையே இந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

ராமநாதபுரம் கமுதி அருகே உள்ளது கீழவலசை கிராமம். இங்கு வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் விவசாய தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கிராமத்தில் சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே பேருந்து வசதி இல்லாமல் இருந்திருக்கிறது. இதனால் இங்கு படிக்கும் மாணவ, மாணவியர்கள் மற்றும் வேலைக்காக வெளியூர் செல்பவர்கள் மிகுந்த கஷ்டங்களை சந்தித்து வந்திருக்கின்றனர்.

கீழவலசை கிராமத்தை சேர்ந்த மக்கள் வெளியூர் செல்வதென்றால் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செங்கப்படைக்கு நடந்துசெல்ல வேண்டும். இல்லையென்றால் 5 கிலோமீட்டர் நடந்துசென்று பேரையூர் கிராமத்தை அடைந்து அங்கிருந்து பேருந்தை பிடிக்க வேண்டும். இந்நிலையில், தங்களது கிராமத்திற்கு பேருந்து வசதி செய்துகொடுக்கும்படி தொடர்ந்து கிராம மக்கள் கோரிக்கை வைத்துவந்தனர்.

இந்நிலையில் கிராம மக்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்த்திருக்கிறது. இதன் பலனாக சுதநதிரத்திற்கு பிறகு முதன் முறையாக இந்த கிராமத்திற்கு பேருந்து இயக்கப்பட்டிருக்கிறது. இதனால் மகிழ்ந்துபோன கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் பேருந்தை கட்டியணைத்து வரவேற்றனர்.

மேலும், தங்களது கிராமத்திற்கு வந்த முதல் பேருந்திற்கு சந்தனம், குங்குமம், மாலை ஆகியவற்றை அணிவித்து மக்கள் ஒரு விழாவையே நடத்தியுள்ளனர். இதன் ஒருபகுதியாக தேங்காய் உடைக்கப்பட்டு, ஊதுபத்தி ஏற்றியும் பெண்கள் குலவை போட்டும் பேருந்தை அகமகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர்.

தங்களது நீண்டநாள் கோரிக்கையான பேருந்து வசதி கிடைத்ததால் கீழவலசை கிராம மக்கள் மிகுந்த சந்தோசம் அடைந்திருக்கின்றனர். இதனிடையே, தங்களுடைய கிராமத்திற்கு பேருந்து வந்ததை மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்ற புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன.

BUS, INDEPENDENCE, RAMANATHAPURAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்