100 வருஷமா பொங்கலே கொண்டாடாத மக்கள்.. வினோத கிராமத்தின் திகில் பின்னணி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த 100 வருடங்களாக பொங்கல் பண்டிகையே கொண்டாடப்படுவது கிடையாது. இதன் பின்னணியில் உள்ள காரணம் தான் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
Also Read | ஆத்தாடி மைனஸ் 50 டிகிரி குளிரா.. அசால்ட்டாக டீல் செய்யும் மனிதர்கள்.. எங்கய்யா இருக்கு இந்த ஊரு?.
பொங்கல் பண்டிகை தமிழர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. உழவின் சிறப்பை கொண்டாடும் விதத்தில் நடைபெறும் இந்த பண்டிகை தை முதல் நாள் அன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகள் பொங்கல் பண்டிகை பெரிய அளவில் கொண்டாடப்படாத நிலையில் தற்போது நிலைமை மாறியுள்ளது. ஆனால், நாமக்கல் அருகே உள்ள கிராமம் ஒன்றில் கடந்த 100 வருடங்களுக்கும் மேலாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதே கிடையாது என்கிறார்கள் அந்த ஊர் மக்கள்.
நாமக்கல்லில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சிங்கிலிபட்டி என்னும் கிராமம். தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் இந்த கிராமத்தினர் மட்டும் கடந்த 100 ஆண்டுகளாகவே பொங்கல் பண்டிகையை தவிர்த்து வருகின்றனர். மேலும், பொங்கல் வைத்தால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் எனவும் மக்கள் அஞ்சுவதாக சொல்லப்படுகிறது.
கடந்த 100 ஆண்டுகளுக்கு முன், கிராம மக்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தியுள்ளனர். அப்போது, படையல் வைக்கப்பட்ட பொங்கலை நாய் ஒன்று சாப்பிட்டிருக்கிறது. இதனை அபசகுணமாக மக்கள் கருதவே, பொங்கல் கொண்டாட்டம் அந்த வருடம் கைவிடப்பட்டிருக்கிறது. அடுத்த வருடம் பொங்கல் வைக்கும்போது ஊரில் இருந்த கால்நடைகள் சில மரணமடைந்ததாக தெரிகிறது.
இதனால் அஞ்சிய கிராம மக்கள், பொங்கல் வைப்பதையே தவிர்த்திருக்கின்றனர். மேலும், இந்த கிராமத்தில் இருந்து திருமணமாகி வெளியூர் செல்லும் பெண்களும் தங்களது வீட்டில் பொங்கல் வைப்பது இல்லை என சொல்கிறார்கள் உள்ளூர் மக்கள். இருப்பினும், கிராமத்தில் உள்ள கோவில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சில வருடங்களுக்கு முன்னர் ஊரின் தலைவர் அனைவரும் பொங்கல் வைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொங்கலும் வைத்ததாகவும் அப்போது அவரது வீட்டில் இருந்த மாடு இறந்ததாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும், தற்போது நிலைமை மாறியுள்ளதாகவும் ஒருசிலர் பொங்கல் பண்டிகையை கொண்டாடிவருவதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
Also Read | "அந்த காலத்தில் தமிழ்நாடு என்பது இல்லை".. 'தமிழ்நாடு சர்ச்சை'.. ஆளுநர் பரபரப்பு விளக்க அறிக்கை..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அதை கொடுங்க’.. சென்னை ஏர்போர்ட்டில் ரசிகர் போர்த்திய பொன்னாடை.. காரில் ஏறும்முன்பு கேட்டுவாங்கிய ரஜினி! ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து!
- இங்க இருந்த கிராமம் எங்கப்பா?.. வீடுகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீஸ்.. 4 வருஷத்துக்கு ஒரு முறை நடைபெறும் சுவாரஸ்ய சம்பவம்..!
- "யார் இறந்து போனாலும் ஒரே ஒரு மாலை தான்".. ஊரே சேர்ந்து எடுத்த அதிரடி முடிவு!!.. தமிழ்நாடு முழுக்க வைரல்!!
- "ஓட்டு போடுறோம்.. ஆனா யாரும் உள்ள வரக்கூடாது".. அரசியல் கட்சியினருக்கு தடை விதித்துள்ள கிராமம்.. பல வருஷமா இப்படித்தானாம்.!
- "18 வயசு ஆகலையா?.. அப்போ செல்போனை தொட கூடாது".. கிராமத்தின் விநோத கட்டுப்பாடு.. அபராதம் வேற போடுறாங்களாம்..!
- "மொத்த ஊரும் 2 கோடி ரூபாய்க்கு".. 30 வருசமா ஆளே இல்லாத கிராமம்.. மலைக்க வைக்கும் பின்னணி!!
- Non Vegக்கு நோ.. "மீறி சாப்பிட்டா இதான் கதி".. காலம் காலமா Follow பண்ணும் கிராமம்!!
- "ஊர்'னா இப்படி இருக்கணும்".. 40 வருசமா ஒரு போலீஸ் கேஸ் கூட இல்லையாம்.. இதுக்காக அவங்க Follow பண்ற விஷயம் தான் அல்டிமேட்
- "அந்த 1:30 மணி நேரம், TV, செல்போன்'னு எதையும் Use பண்ண கூடாது".. அதிரடி நடைமுறையை Follow பண்ணும் கிராமம்.. காரணம் இது தான்!!
- "வயல்'ல தோண்டுறப்போ கெடச்ச சாமி சிலை'ங்க இது".. பயபக்தியுடன் தொழுது காணிக்கை போட்ட மக்கள்.. "உண்மை தெரிஞ்சதும் ஊரே நடுங்கி போச்சு"