“தமிழ்நாடு தனி நாடு கிடையாது.. பாஜக இந்தியாவுக்கு நல்லது செஞ்சிருக்கு!”.. “பாஜகவில் சேர்ந்ததுக்கான காரணம் என்ன?” - குஷ்புவின் பரபரப்பு பதில்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்திலும் இருந்து விலகிய பின்னர், பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.
அதில் நிரூபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு குஷ்பு அளித்த பதிலில், “இருக்கும் இடத்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதால் காங்கிரஸில் இருந்த வரை காங்கிரஸுக்கு சாதகமாக பேசினேன். நான் உயர்பதவியில் இருப்பவர்கள் சர்வாதிகாரம் செய்கிறார்கள் என யாரைப் பற்றிப் பேசினேன் என்பது காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்களுக்கு தெரியும். குறிப்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு குற்ற உணர்ச்சி ஏற்படும்.” என்று பேசினார்.
மேலும் மோடியை ஹிட்லர் என்றும் அமித்ஷாவை நாசி என்றும் கடுமையாக விமர்சித்து விட்டு அவர்களுடன் மேடையைப் பகிர்ந்து கொள்வது எப்படி என்று நிரூபர்கள் கேட்ட கேள்விக்கு, “ஆமாம் நான் பாஜகவை கடுமையாக விமர்சித்திருக்கிறேன். ஆனால் மனிதர்களிடையே மாற்றம் ஒன்றுதான் நிரந்தரமானது. அவர்களுக்கு எதிராக நான் பேசியிருக்கிறேன். ஆனால் போகப்போக நாட்டுக்கு எது நல்லது என்பது எனக்கு புரிகிறது. எதிர்க்கட்சியில் இருந்ததால் பாஜகவை விமர்சிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை எங்களுக்கு இருந்தது. ஒரு தேசியக் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக இருக்கும் பொழுது நமக்கு விருப்பமில்லை என்றாலும், திருப்தி இல்லை என்றாலும் எதிர்க்கட்சியாக ஆளும் கட்சியை விமர்சித்துதான் ஆக வேண்டும்.
பல தடவை நான் பாஜவை ஆதரிச்சு பேசியிருக்கிறேன். எதிர்க்கட்சியான காங்கிரஸில் இருந்து நான் உட்பட பலரும் பாஜகவை தாக்கி பேசியிருக்கிறோம். ஆனால் இதுவரைக்கும் பாஜக மீதோ எந்த தலைவர்கள் மீதோ எந்தவகையிலும் ஊழல் எதுவும் இல்லை. மசோதாக்களில் அந்த தவறு இருக்கு. இந்த தவறு இருக்கு என்று காங்கிரஸ் பேசியிருக்கலாம். மக்கள் பெரும்பான்மை உங்களுக்கு இல்லை. காரணம் மக்களுக்கு உங்க மேல நம்பிக்கை இல்லை. மக்கள் யாரை நம்புகிறார்களோ அவர்களை தான் ஜெயிக்க வைப்பாங்க. மக்கள் மோடியை மீண்டும் ஜெயிக்க வைத்து பிரதமராக்கியிருக்கிறார்கள்.” என்று பதில் அளித்தார்.
இதேபோல், காவிரி பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை, பாலாறு பிரச்சனை என எதிலும் தமிழகத்துக்கு ஆதரவான காரியங்களை பாஜக செய்யவில்லை. அப்படியானால் பாஜக தமிழகத்துக்கு செய்த நல்லது என்ன? என்று நிரூபர்கள் கேட்டதற்கு பதில் அளுத்த குஷ்பு, “தமிழ்நாட்டுக்குள் இப்போதுதான் எல்.முருகன் (தமிழக பாஜக தலைவர்), நான் உள்ளிட்டோர் வருகிறோம். தமிழ்நாடு தனி நாடு கிடையாது. பாஜக இந்தியாவுக்கு நல்லது செய்திருக்கிறது.
ஆறு மாதம் கழித்து தமிழ்நாட்டுக்கு பாஜக என்ன நல்லது செய்து இருக்கிறது என்று கேள்வி கேளுங்கள் நான் உங்களுக்கு பதில் சொல்கிறேன். பொறுத்திருந்து பாருங்கள்” என்று பதில் அளித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “மாற்றம் பற்றிய ட்வீட்!”.. “ராஜினாமா கடிதம்!”.. “டெல்லி ப்ளான்ஸ்!” .. குஷ்புவால் அடுத்தடுத்து.. பரபரப்பாகும் தேசிய அரசியல் களம்!
- ‘பாஜக’வில் இணைகிறார் நடிகை குஷ்பு???’ ...’அவசர அவசரமாக டெல்லி கிளம்பி சென்றார்...’ ’தமிழக அரசியலில் திடீர் திருப்பம்...!!!
- படம்பிடிக்கப்பட்ட வரைபடத்துடன் கூடிய நிலப்பட்டாக்கள்!.. பிரதமர் மோடி தொடங்கி வைத்த... சொத்து விவர அட்டை வழங்கும் திட்டம்!.. முழு விவரம் உள்ளே
- 'தொல்லியல் படிப்புக்கான கல்வித்தகுதியில்'... 'தமிழ் மொழி சேர்ப்பு'... - 'பிரதமருக்கு நன்றி தெரிவித்து'... 'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்!'...
- காட்சிகள் மாறுகிறதா?.. 'திமுக'வுடன் 'பாஜக' கூட்டணி!?.. பொன்.ராதாகிருஷ்ணன் பரபரப்பு தகவல்!
- பா.ஜ.க.வில் புதிய பொறுப்பு?.. முன்னாள் பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா 'அதிரடி' கருத்து!.. கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை!
- குஷ்பு பாஜகவில் இணைகிறாரா?.. வெகு நாட்களாக அதிர்வலைகளை ஏற்படுத்திய... சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!.. என்ன நடந்தது?
- “கட்சியில் இணைந்த கையோடு”.. “இடைத் தேர்தலில் போட்டியிடுகிறாரா?”.. யார் இந்த குஷூமா?
- ராகுல் காந்தி மீது தடியடி நடத்தி... 'அதிரடி'யாக கைது செய்த காவல்துறை!.. நெஞ்சை பிடித்து தள்ளியதால்... உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பு!
- “உயிருக்கு ஆபத்து இருக்கு!”.. கங்கணாவைத் தொடர்ந்து Y பிரிவு பாதுகாப்பு கோரிய பிரபல நடிகை!