'சென்னைக்குள்' இ-பாஸ் தேவையா? 'திங்கள்' கிழமையில் இருந்து 'சென்னை இப்படிதான்' இருக்கும்! வெளியான 'அறிவிப்பு'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் 6-ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சென்னையில் போக்குவரத்து தொடர்பான சில விளக்கங்கள் போக்குவரத்து கூடுதல் ஆணையர் கண்ணன் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தின் பிறகு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை உள்ளே வாகனங்கள், ஆட்டோக்கள், கால் டாக்ஸி முதலானவை திங்கள்கிழமை முதல் இயங்கலாம் என்றும் சென்னை மண்டலம் உள்ளே இயங்குவதற்கு இ பாஸ் எதுவும் தேவையில்லை என்றும் கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் திங்கள்கிழமை முதல் சிக்னல்கள் இயங்கும் என்று தெரிவித்த அவர் போலி இ-பாஸ் பற்றி தகவல் கிடைக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
முன்னதாக ஜூலை 6-ஆம் தேதி முதல் சென்னையில் அமலுக்கு வர உள்ள தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். அதன்படி சென்னை பகுதிகளில் இயங்கும் உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம் என்றும் அதேசமயம் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இதேபோல் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பார்சலுக்கு மட்டுமான அனுமதியுடன் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளார். காய்கறி கடைகள் மற்றும் மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா...' உறுதி செய்த மாநிலம்...!
- 'சென்னை- ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள்...' திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருகிறது...!
- 'சமூகம் பெரிய இடம் போல'... 'தலை சுற்றவைக்கும் மாஸ்க்கின் விலை'... வச்சு செஞ்ச நெட்டிசன்கள்!
- “கொரோனா உறுதி செய்யப்பட்ட”.. அதிமுக அமைச்சரின் மனைவி .. சென்னை மருத்துவமனையில் அனுமதி!
- கொரோனாவுக்கு எதிரா 'தரமா' வேலை செய்யுது... 90% மருந்தை 'வாங்கி' குவித்த அமெரிக்கா... 'கடுப்பான' உலக நாடுகள்!
- தடபுடலாக நடந்த 'விருந்து'... மணப்பெண்ணின் தாயாரை 'பாதியில்' அழைத்துச்சென்ற அதிகாரிகள்... அடுத்து நாமதான் போல... 'அதிர்ச்சி'யில் உறவினர்கள்!
- தமிழகத்தில் இன்று 35 மாவட்டங்களில் கொரோனா தொற்று!.. மளமளவென உயரும் எண்ணிக்கை!.. முழு விவரம் உள்ளே
- தமிழகத்தில் 1 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு!.. ஒரே நாளில் 64 பேர் பலி!.. முழு விவரம் உள்ளே!
- 'சந்தோசமா ஷாப்பிங் வந்த பெண்'... 'மொத்த சந்தோசத்தை உடைத்த ஒரே ஒரு போன் கால்'... நெஞ்சை உருக்கும் வீடியோ!
- 'ஐசிஎம்ஆர்-ன் கொரோனா தடுப்பு மருந்து...' சென்னை உள்ளிட்ட 12 இடங்களில் பரிசோதனை - பரபரப்பு தகவல்!