‘ஹோட்டல் மெனுவில் இடம் பிடித்த பழையசோறு.. ஆன்லைனிலும் ஆர்டர் செய்யும் கஸ்டமர்கள்’.. பிரபலமாகும் உணவகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரையில் ஆன்லைன் மூலம் பழைய சோறு படுவிற்பனையாகும் உணவகம் ஒன்று மிகவும் பிரபலமாகி வருகிறது.

ஐடி இளைஞர்கள் தொடங்கி, முதியவர்கள் வரை பலரும் விரும்பி உண்ணும் இந்த உணவினால் இந்த உணவும், உணவகமும் ட்ரெண்டிங்கில் உள்ளது.  முதல்நாள் இரவு சமைத்த உணவு மிச்சமானால் அதில் தண்ணீர் ஊற்றி, அடுத்த நாள் காலை மோர் ஊற்றியோ, சின்ன வெங்காயத்தை பொடியாக தூவியோ உண்டால், அதை விட சிறந்த அருமருந்தில்லை எனலாம்.

அதுதான் பழையசோறு. அந்த பழையசோற்றுக்குதான் இப்போது டிமாண்ட் அதிகரித்துள்ளது. அத்தகைய உடல்வலிமையைக் கொடுக்கவல்ல பழையசோறுக்கென்றே மதுரை மாட்டுத்தாவணியில் பிரத்யேகமாக செயல்படும் உணவகம் வாடிக்கையாளர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதன் சிறப்பென்னவென்றால், முதல் நாள் இரவே சமைத்து அடுத்த நாள் நீராகாரமாக்கி இந்த ஹோட்டலில் பழையசோறு என்கிற பெயரிலேயே தருகிறார்கள் என்பதால், நவீனமயமான இந்த உலகிலும் பழைமை மாறாத இந்த உணவை பலரும் விரும்பி உண்ண முனைகின்றனர்.

நூடுல்ஸ், பீசா, பர்கர் என்கிற ஜங்க் ஃபுட்களுக்கு மத்தியில், நீர் ஆகாரத்தையே முக்கிய மெனுவாக்கி முன்னோர்கள் கூறிய நீராகாரத்தின் மகத்துவம் அறிந்த வாடிக்கையாளர்கள் பலரும் இந்த உணவைச் சாப்பிட்டுவிட்டு வெகுவாக பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், ஆன்லைனிலும் இந்த உணவை ஆர்டர் செய்வதாகவும் இந்த உணவக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

MADURAI, FOOD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்