'சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி...' 'கடந்த 2 நாட்களில் 75 பேருக்கு தொற்று உறுதி...' 'நிலைமை மோசமாக இதுதான் காரணம்...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக திருவிக நகர் மாறியுள்ளது. அங்கு கடந்த 2 நாட்களில் மட்டும் 75 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இதுவரை மொத்தம் பாதித்துள்ள 767 நபர்களில், 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில், குணமடைந்து உள்ளவர்கள் எண்ணிக்கை 215 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று உறுதி செய்யப்பட்ட 104 தொற்றுகளில் 94 தொற்று சென்னையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று அதிகபட்சமாக, திருவிக நகர் மண்டலத்தில் 41 நபரும், ராயபுரத்தில் 25 நபரும், அண்ணாநகரில் 8 நபரும், தண்டையார்பேட்டையில் ஏழு நபரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதற்கு முன் தினம் அதிகம் தொற்று உறுதி செய்யப்பட்ட மண்டலமாக திருவிக நகர் தான் உள்ளது.
நேற்றின் முன் தினம் அங்கு 34 பேருக்கு தொற்று ஏற்பட்டது. நேற்று நாற்பத்தி ஒரு நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டது.
திருவிக நகரில் அதிகமான பாதிப்பு ஏற்படுவதற்கு காரணம் அந்தப் பகுதியில் மிக நெருக்கமான வீடுகள் இருப்பதுதான் எனக் கூறப்படுகிறது. அப்பகுதி மக்கள் தனிநபர் இடைவெளியை சரியாக கடைப்பிடிப்பதில்லை என்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்..
இந்தநிலையில், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் பாதிக்கப்பட்ட 2 நபரும் குணமடைந்து உள்ள நிலையில், சென்னையில் தொற்றிலிருந்து முழுமையாக விடுபட்ட மண்டலமாக சோழிங்கநல்லூர் மாறியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ''காசநோய் தடுப்பூசியால் கொரோனா உயிரிழப்பு குறையுதா? ''அறிவியல் என்ன சொல்கிறது?...'' 'உலக சுகாதார மையத்தின் திட்டவட்ட பதில்...'
- 'தகவல்களைப் பகிர்ந்தால் தான் வழி கிடைக்கும்...' 'கொரோனாவின் ஆரம்பப் புள்ளியை கண்டறிய வேண்டும்...' 'சீனாவிற்கு எதிராகத் திரளும் பாதிக்கப்பட்ட நாடுகள்...!'
- ஊரடங்கால் கிடைத்த மிகப்பெரிய 'நற்பலன்'... இப்டியே போனா 'கொரோனா'வை... நாட்டை விட்டே 'வெரட்டி' விட்றலாம்!
- நமக்கு 'சோறுதான்' முக்கியம்... ஊரடங்கு நேரத்துலயும் மக்கள் 'கூகுள்ல'... விழுந்து,விழுந்து தேடுனது 'இந்த' உணவைத்தானாம்!
- 'குழி தோண்டி புதைச்சிட்டு இருந்தாரு...' 'கண்டிப்பா கொரோனா தான்...' 'புதைச்ச இடத்துல போனப்போ தான் உண்மை தெரிஞ்சுது...' பரபரப்பு சம்பவம்...!
- ‘லாக்டவுனில் மளிகை பொருட்கள் வாங்க போன பேச்சுலர்!’.. ‘மணமகளுடன் வீடு திரும்பியதால் பரபரப்பு!’ .. வீடியோ!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- 'சென்னையில் கொரோனா பரவல்’... ‘அதிகரிக்க காரணம் இதுதான்’... ‘சென்னை மாநகராட்சி விளக்கம்’... ‘இந்த 6 ஏரியாக்களில் தான் ஜாஸ்தி’!
- 'அவங்க நோயாளிகள் இல்ல... விருந்தாளிகள்!'.. பிரத்யேக வசதிகளோடு... கோவிட் நல வாழ்வு மையம்!.. அசத்தும் சுகாதாரத்துறை!.. அப்படி என்ன ஸ்பெஷல்?
- 'ரெண்டு வைரஸையும் அடிச்சு ஓட விட்ருக்காங்க...' 'மன தைரியத்தை பாராட்டி கைத்தட்டி ஆரவாரம் செய்த மருத்துவர்கள்...' 107 வயது பாட்டியின் கதை...!