600 தட்டுகள்.. கண்டெய்னர் லாரியில் வந்த சீர்வரிசை.. திருவாரூரை திரும்பிப் பார்க்க வைத்த 6 சகோதரிகள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விபத்தில் உயிரிழந்த சகோதரரின் ஆசையை சகோதரிகள் பிரமாண்டமாக நிறைவேற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் கீழ வீதியை சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவர் அப்பகுதியில் இலை கடை நடத்தி வந்தார். இந்த சூழலில் 3 வருடங்களுக்கு முன்பு விபத்தில் ஒன்றில் முருகன் உயிரிழந்தார். இவருக்கு அட்சய ரத்னா என்ற 13 வயது மகள் உள்ளார். தனது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பாக செய்ய வேண்டும் என முருகன் ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் எதிர்பாராத விதமாக முருகன் உயிரிழந்துவிடவே அவரது குடும்பத்தார் செய்வதறியாது திகைத்தனர். இந்த சூழலில் முருகனின் 6 சகோதரிகள், தங்களது சகோதரரின் ஆசையை நிறைவேற்ற முடிவு எடுத்துள்ளனர். அதன்படி, திருவாரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 2000 பொதுமக்களுக்கு உணவு வழங்கியுள்ளனர்.
மேலும், சுமார் 600 சீர்வரிசை தட்டுகளை திறந்த கண்டெய்னர் லாரியில் ஏற்றி கொண்டு செண்டை மேளம் முழங்க, வானவேடிக்கைகளுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்றுள்ளனர். லாரியில் முன் மறைந்த தங்களது சகோதரர் முருகனின் திருவுருவப் படத்தையும் வைத்தனர்.
இந்த பிரமாண்ட சீர்வரிசை ஊர்வலத்தை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். உயிரிழந்த சகோதரரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக, மருமகளின் மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பாக நடத்திய அத்தைகளின் செயல் பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
Also Read | ‘9 மாசமா கணவரை காணோம்’.. கைதான மனைவி கொடுத்த அதிரவைக்கும் வாக்குமூலம்..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இன்னும் 1 மாசத்துல கல்யாணம்.. அதுக்குள்ள இப்படியா நடக்கணும்’.. கீற்று கொட்டகையில் நின்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!
- "1 கோடி ரூபாய் நிலம்.." முஸ்லீம் மக்களுக்காக இந்து சகோதரிகள் செய்த விஷயம்.. "20 வருஷம் கழிச்சு அப்பா ஆசைய நிறைவேத்திட்டோம்.."
- பிரம்மாண்ட தேரை கீழே தள்ளிவிட்டு தாங்கிப் பிடிக்கும் கிராம மக்கள்.. 100 வருஷமா நடக்கும் வினோத திருவிழா..!
- தேர்தல் முடிவுகள்: திருவாரூரில் அசத்தி காட்டிய தம்பதி.. மிரண்டு போன அரசியல் கட்சிகள்
- ஏன் சார் 'டல்லா' இருக்கீங்கனு வந்து கேட்பியே டா! பேரிடியாக விழுந்த மாணவனின் மரணம், உருக வைக்கும் ஆசிரியரின் பதிவு
- சைக்கிளில் அலுவலகத்துக்கு சென்ற திருவாரூர் கலெக்டர்.. கவனம் பெறும் போட்டோ.. என்ன காரணம்..?
- காத்திருக்கும் அரசு நாற்காலிகள்!.. விவசாயக் குடும்பத்தில் பிறந்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 சகோதரிகள் செய்த அசாத்திய சாதனை!
- ‘முதலமைச்சர் என்பது அடுத்த கட்டம்... இதுதான் எனக்கு முதலில்!’... முதல்வர் எடப்பாடி பழனிசாமி ‘பளிச்’ பதில்கள்!
- 'எந்த அனுபவமும் இல்ல!'.. 'ஒரு பக்கம் மீன் விற்பனை'.. 'இன்னொரு பக்கம் ஆன்லைன் வகுப்பு!'.. குடும்ப சூழலால் மாணவிகளின் துணிச்சல் முடிவு!
- 'அண்ணனும், தங்கச்சியும் எப்பவுமே ஒண்ணா இருப்பாங்க'... 'வந்த துயரமும் ஒண்ணாவே வந்துடுச்சு'... நொறுங்கிப்போன குடும்பம்!