'அண்ணனும், தங்கச்சியும் எப்பவுமே ஒண்ணா இருப்பாங்க'... 'வந்த துயரமும் ஒண்ணாவே வந்துடுச்சு'... நொறுங்கிப்போன குடும்பம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையில் திடீரென நடக்கும் எதிர்பாராத சம்பவம் ஒட்டுமொத்த குடும்பத்தின் சந்தோஷத்தையும் நிலைகுலையச் செய்துவிடும். அந்த வகையில் அண்ணன், தங்கைக்கு நடந்த துயர சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது தங்கை அபிநயா. மிகவும் பாச பிடிப்பு கொண்ட இருவரும் மன்னார்குடி அருகே தென்பாதி கிராமத்தில் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒன்றாகச் செல்ல முடிவு செய்தார்கள். இதையடுத்து சடங்கு நிகழ்ச்சிக்கு இருவரும் கிளம்பிய நிலையில், ஆனந்தராஜ் தனது இருசக்கர வாகனத்தை ஓடினார். தங்கை அபிநயா பின்னாடி அமர்ந்திருந்த நிலையில், மன்னார்குடி அடுத்துள்ள வடபாதி சொக்கப்பெருமாள் கோவில் அருகே இருவரும் சென்று கொண்டிருந்தார்கள்.

அந்த நேரம் முத்துப்பேட்டையிலிருந்து மன்னார்குடி நோக்கி லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அபிநயா, ஆனந்தராஜ் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது லாரி மோதியது. லாரி மோதிய வேகத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்கள். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தலையாமங்கலம் போலீசார் விபத்தில் உயிரிழந்த இருவரையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே ஆசையாகச் சடங்கு நிகழ்ச்சிக்குப் புறப்பட்டுச் சென்ற அண்ணனும், தங்கையும் ஒரே நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்