கரணம் அடித்த 'கபடி' வீரர்... ஆர்ப்பரித்த மக்கள்.. அடுத்த ஒரு சில வினாடிகளில் நடந்த 'அதிர்ச்சி' சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கபடி வீரர் ஒருவர், மக்கள் முன்னிலையில் கரணம் அடித்துக் கொண்டிருந்த சமயத்தில் நிகழ்ந்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலையில் அமைந்துள்ளது ஆரணி என்னும் பகுதி. இங்குள்ள களத்து மேட்டு தெருவில் மாரியம்மன் கோவில் திருவிழா சமீபத்தில் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக, மாரியம்மன் கூழ் வார்க்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது. அதே போல, கூழ் வார்க்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு, கபடி போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனையடுத்து, கபடி போட்டிகளில் பங்கேற்பதற்காக அப்பகுதியை சேர்ந்த அணி ஒன்று, அங்கே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது, சம்மந்தப்பட்ட அணியை சேர்ந்த கபடி வீரரான வினோத் குமார் என்பவரும் பொது மக்கள் முன்னிலையில், கரணம் அடித்து பயிற்சியில் ஈடுபட்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
வினோத் குமார் கரணம் அடித்துக் கொண்டிருப்பதை அங்கே கூடி இருந்த பொது மக்களும் மிக ஆர்வமாக கண்டு களித்து கொண்டிருந்துள்ளனர். இதனால், வினோத்தும் மிக உற்சாகமாக கரணம் அடித்து கொண்டிருந்த ஒரு சூழ்நிலையில், யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் அங்கே அரங்கேறி உள்ளது. முதல் கரணம் அடித்து விட்டு, இரண்டாவது கரணம் அடிக்கும் போது, நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார் வினோத் குமார்.
இதனைக் கண்டதும் அப்பகுதியில் இருந்த பொது மக்கள் அனைவரும் பதறி போகவே, வினோத்தை பார்த்த போது அவரும் மயங்கிய நிலையில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சக கபடி வீரர்கள் சேர்த்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் வினோத் குமார் உயிரிழந்து போனதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கபடி வீரர் ஒருவர், கோவில் திருவிழாவில் நடைபெற்ற கபடி போட்டிக்காக தயாரான சமயத்தில், கரணம் அடித்த போது, மயங்கி உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்கள் அனைவரையும் கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும், வினோத் குமாருக்கு திருமணமாகி இரண்டு மகன்களும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
சமீபத்தில் கூட, கடலூர் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த இளம் கபடி வீரர், களத்தில் ஆடி கொண்டிருந்த போதே உயிரிழந்த சம்பவம், தமிழகம் முழுவதும் சோக அலைகளை ஏற்படுத்தி இருந்தது. தற்போது மீண்டும் ஒரு கபடி வீரர், போட்டிக்கு தயாராகும் நோக்கில் உயிரிழந்த விஷயம், இன்னும் அதிக வேதனையை உண்டு பண்ணி உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- திருமணம் முடிந்த 9 வது நாளில்.. தாலியை கழட்டி வைத்து இளம் பெண் எஸ்கேப்.. லெட்டரை பார்த்து ஷாக் ஆன புது மாப்பிள்ளை
- என் மனைவி கள்ளக்காதலனோடு.. பேசிகிட்டு இருக்குறதா தகவல் வந்துச்சு.. ஸ்பாட்டுக்கு போய் கணவன் நடத்திய அதிரடி ஆக்ஷன்
- "திருமணக் கனவால் நம்பி பேசிய பெண்கள்!"... "ஆசை வார்த்தை கூறி".. மேட்ரிமோனி மூலமாக 'இளைஞர்' செய்த 'நூதன மோசடி'!
- தமிழகத்தில் முதன்முறையாக 'இறைவனின் சமையலறை'!.. மாவட்ட ஆட்சியர் அதிரடி!.. தமிழகம் முழுவதும் பின்பற்றப்படுமா?.. மக்கள் ஆவல்!
- 'திருவண்ணாமலை' மாவட்டத்தில்... பல கோடி ரூபாய்க்கு 'நலத்திட்ட' பணிகள்... தொடங்கி வைத்த 'தமிழக' 'முதல்வர்'!!!
- 'திருவண்ணாமலை' வந்த 'அமெரிக்க' பொண்ணு... ’ஒரு மாசமா ஃபாலோ பண்ண சாமியாருக்கு...’ ‘காத்திருந்த அதிர்ச்சி 'வைத்தியம்'!!!
- ‘துடிதுடித்து அலறிய மரண ஓலம்!’.. ‘அதிர்ச்சியை தந்த’ மாணவிகளின் செயல்கள்!.. அடுத்தடுத்த சோக சம்பவங்கள்!
- “அப்படினா நீ உயிரோடவே இருக்க வேணாம்!”.. இரும்பு ராடால் 17 வயது சிறுமியை ஓங்கி அடித்த இளைஞர்... அடுத்த நொடி செய்த கொலைநடுங்கும் காரியம்!
- 'காட்டு விலங்க புடிக்க வெச்சிருந்த 'வெடிகுண்ட'... 'பழம்'ன்னு நினைச்சு கடிச்சிருக்கான்...' - சிறுவனுக்கு நிகழ்ந்த 'கலங்கடிக்கும்' சோகம்!
- "இழவுக்கு போனவன தடுத்து நிறுத்தி சவக்குழி வெட்ட சொல்றாங்க!".. ஊராட்சி மன்றத் தலைவருக்கே இந்த கதியா?