'தம்பிக்கு என்ன ஆச்சுன்னு பாரு'...'கதவை திறந்த நண்பர்கள்'...உறைந்து நின்ற என்ஜினீயரிங் மாணவர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருப்போரூர் அருகே பிரபல கல்லூரியில் அடுத்தடுத்து நிகழ்ந்த தற்கொலை சம்பவங்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் தங்கதுரை. இவரது மகன் கிஷோர். இவர் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த காலவாக்கம் பகுதியில் உள்ள பிரபல என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்ததால் தினமும் இரவு வீட்டில் உள்ளவர்களிடம் கிஷோர் பேசுவது வழக்கம்.

இந்நிலையில்  நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மேலே கிஷோரின் சகோதரர் அவரை தொடர்பு கொண்டு பேச முயற்சித்துள்ளார். ஆனால் பலமுறை அவரது எண்ணிற்கு தொடர்பு கொண்டும் கிஷோர் தனது போனை எடுக்கவில்லை. இதனால் தம்பி ஒருவேளை தூங்கி விட்டானோ என்ற சந்தேகத்தில் அவனது அறைக்கு சென்று பார்த்து வருமாறு கிஷோரின் நண்பர்களிடம் அவரது சகோதரர் தெரிவித்துள்ளார். இதையடுத்து கிஷோரின் நண்பர்கள் அவரது அறைக்கு சென்று கதவை தட்டியுள்ளார்கள். ஆனால் கதவை கிஷோர் திறக்காததால் நண்பர்கள் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார்கள்.

அப்போது கிஷோரின் நண்பர்கள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது. விடுதி அறையில் உள்ள ஜன்னல் கம்பியில் துணி கட்டி, கிஷோர் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து திருப்போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று கிஷோர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே கிஷோரின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள். '

'இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கல்லூரி விடுதியில் தங்கி சிவில் என்ஜினீயரிங் பயின்ற கோகுல் என்பவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இது போன்ற தற்கொலை சம்பவம் தொடர்ந்து கொண்டே வருவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே கிஷோரை யாரேனும் அடித்துக்கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா? என்ற சந்தேகமும் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

SUICIDEATTEMPT, STUDENTS, COLLEGESTUDENT, THIRUPORUR, ENGINEERING STUDENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்