“மன உளைச்சலுக்கு ஆளாவதை விட, ரஜினிக்கு இதுதான் ரொம்ப நல்லது!” - திருமாவளவனின் ‘அடுத்த’ வைரல் பேச்சு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறி இருக்கும் திருமாவளவன், ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து மன உளைச்சலுக்கு ஆளாவதை விட அவர் வராமல் இருப்பது நல்லது என கருத்து தெரிவித்துள்ளார்.

“மன உளைச்சலுக்கு ஆளாவதை விட, ரஜினிக்கு இதுதான் ரொம்ப நல்லது!” - திருமாவளவனின் ‘அடுத்த’ வைரல் பேச்சு!

மத வெறி , சாதி வெறியை தூண்டும் வகையில் யாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டு இருப்பதாக குற்றம்சாட்டி, அதற்கு தடை விதிக்க கோரி, டிஜிபி திரிபாதியை சந்தித்து புகார் மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், எம்ஜிஆர் படத்தை  பாஜக பயன்படுத்துவது ஆபத்தானது என்று கூறினார்.

பின்னர் ரஜினியின் சமீபத்திய ட்விட்டர் விளக்கம் பற்றி பேசிய திருமாவளவன், “அவர் (ரஜினி) நல்ல முடிவெடுத்திருக்கிறார். உடல்நலத்தோடு அவர் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் இந்த அரசியலில் இறங்கி சாதிய, மதவாதிகளின் பிடிகளில் சிக்கி மன உளைச்சலுக்கு ஆளாவதை விட அவர் ஒதுங்கியிருப்பது, பாதுகாப்பாக இருப்பது, நலமுடன் இருப்பது, மிக்க நல்லது. ஆகவே அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்!” என கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்