பரீட்சை எழுதுன 9 லட்சம் பேர்ல தமிழ்-ல 100க்கு 100 மார்க் எடுத்த எடுத்த ஒரே மாணவி.. குவியும் பாராட்டுகள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருச்செந்தூரை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தமிழ் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் எடுத்திருக்கிறார். இந்நிலையில் அந்த மாணவிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertising
>
Advertising

தமிழகம் முழுவதும் இன்று பத்தாவது மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. முன்னதாக ஜூன் 17 ஆம் தேதி வெளியிடப்பட இருந்த பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், ஜூன் 20 ஆம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது. அதன்படி, முதன்முறையாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஒரே நாளில் வெளியிடப்பட்டன. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தமாக 90.07% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழில் 100 மார்க்

பொதுவாகவே தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்களில் 100 மதிப்பெண் எடுப்பது மிகவும் அரிதாகும். இந்நிலையில் திருச்செந்தூரை சேர்ந்த துர்கா என்னும் மாணவி தமிழ் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் எடுத்து அனைவரையும் திகைக்க வைத்திருக்கிறார். தேர்வு எழுதிய 9 லட்சம் மாணவர்களில் தமிழில் 100 மதிப்பெண் எடுத்த ஒரே மாணவி என்ற சாதனையையும் படைத்திருக்கிறார் துர்கா.

ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் செல்வகுமார் என்பவரின் மகள் துர்கா. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவந்தார். தமிழ் மீது கொண்ட ஆர்வம் காரணமாகவே இந்த சாதனை சாத்தியமாகியதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார் துர்கா.

ஆர்வம்

இதுகுறித்து பேசிய மாணவி துர்கா,"நமது தாய் மொழி தமிழ். தமிழ் மொழியின் மீது கொண்ட ஆர்வம் காரணமாகவே தமிழை விரும்பி படித்தேன். அதனாலேயே தமிழில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். நான் ஆங்கில வழி கல்வியில் தான் படித்தேன். ஆனால், எனக்கு பிடித்தமான பாடம் தமிழ்தான். ஆசிரியர்கள் தமிழில் கூடுதல் மதிப்பெண் எடுக்க தொடர்ந்து எனக்கு உத்வேகம் அளித்தனர். ஆசிரியர்கள் தமிழின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு உணர செய்ததன் பலனாக நாங்கள் தமிழ் பாடத்தை விரும்பி படித்தோம்"  என்றார்.

திருச்செந்தூரை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியான துர்கா, தமிழ் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் எடுத்திருப்பது பலரையும் வியப்படைய செய்துள்ளது.

SSLC, TAMIL, EXAM, 10ஆம்வகுப்பு, தேர்வு, தமிழ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்