தமிழகத்தில் மூன்றாவது அலை.. ரெடியாகும் புதிய மருத்துவ முறை.. மா சுப்பிரமணியன் பேட்டி
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகம் : டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் இணைந்து, மூன்றாவது அலையை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு முதல், உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா என்னும் தொற்று, கடுமையாக அச்சுறுத்தி வந்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களில், இதன் தீவிரம் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது.
இந்தியாவிலும், டெல்லி, மத்தியப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், இந்த தொற்று மூலம் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக அதிகமாகி வருகிறது.தமிழகத்தில் , அதுவும் குறிப்பாக சென்னையில், கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த வண்ணம் உள்ளன.
சென்னையில் அதிகரிக்கும் கொரோனா
ஒரு புறம் கொரோனா, மறுபுறம் ஒமைக்ரான் என இரண்டு தொற்றும், வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில், இந்த நோயைக் கட்டுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள், அரசு மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இது பற்றி பேசிய தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், 'தமிழகத்தில் டெல்டா, ஒமைக்ரான் இணைந்து மூன்றாம் அலையை ஏற்படுத்தி வருகிறது. நாளை முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. அதே போல ஜனவரி 10 ஆம் தேதியன்று, பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியும் தொடங்கும். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி, 9 மாதம் ஆனவர்களுக்கு தான், பூஸ்டர் முதலில் போடப்படும்.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை
மேலும், ஒமைக்ரான் தொற்று மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 முதல் 4 நாட்களில் நெகடிவ் என முடிவுகள் வந்து விடுகிறது. இதில், அதிகம் பேர் அறிகுறி இல்லாதவர்களாகேவ இருக்கின்றனர். இந்த காரணத்தினால், அவர்களை வீட்டில் வைத்து, தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது பற்றி, பரிசீலித்து வருகிறோம். இந்த நடவடிக்கைகள், விரைவில் அமல்படுத்தப்படவுள்ளன. அப்படி தனிமைப்படுத்தப்படும் நபர்களுக்கு, மருத்துவ நிர்வாகம் மூலம் வழிகாட்டுதல்கள் அளிக்கப்படும்' என தெரிவித்தார்.
மேலும், மக்கள் அனைவரும் முகக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் என்றும், தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள், உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.
ஒமைக்ரான் பரவலின் நிலை
முன்னதாக, உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், இந்தியாவில் நோயாளிகளை வீட்டிலேயே வைத்து பராமரிப்பது சிறந்தது. மேலும், அதன் பிறகும், அவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சிகிச்சை தேவை என்றால், மருத்துவமனையில் அனுமதிக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அதே போல, எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா, ஒமைக்ரான் தொற்றானது, வேகமாக பரவினாலும் பாதிப்பு என்பது மிக குறைவாக தான் இருக்கும். இரண்டாம் அலையைப் போல, அதிக ஆகிசிஜன் தட்டுப்பாடு நிலவாது என்றும் மக்களுக்கு நம்பிக்கை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஒமைக்ரான் பரவல்: சென்னை மெரினா கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்குத் தடை
- அப்ப ‘கொரோனா’.. இப்ப ‘ஒமைக்ரான் அடுத்து ‘ஃப்ளோரோனா’வா? புதுசு புதுசா கிளம்புதே!! அதிர்ச்சியில் உலக மக்கள்! முழு விபரம்.
- 15 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு.. கொரோனா தடுப்பூசி செலுத்த கோவின் தளத்தில் பதிவு தொடக்கம்
- தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புக்கு தடை.. முதல்வர் உத்தரவு..!
- தமிழகத்தில் நாளை முதல் எதற்கெல்லாம் தடை..? எதற்கெல்லாம் அனுமதி..? முழுவிபரம்..!
- ஒமைக்ரான் டெல்டாவ ஓவர்டேக் பண்ணிடுச்சு, இனி பாதிப்பு கடுமையா இருக்க போகுது, எச்சரித்த தொற்றுநோய் நிபுணர்
- சென்னையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்குங்கள்.. மத்திய அரசு முக்கிய உத்தரவு..!
- ‘சுனாமி வேகத்தில் பரவும்’.. டெல்டா-ஒமைக்ரான் இரட்டை அச்சுறுத்தல்.. எச்சரிக்கை செய்த உலக சுகாதார அமைப்பு..!
- ஒமைக்ரான் தொற்று லேசானது தான்.. பெருசா ஆக்சிஜன் தேவை இருக்காது.. அறிவுறுத்திய எய்ம்ஸ் இயக்குனர்
- வேகம் எடுக்கும் கொரோனா.. நெருக்கடியில் சென்னை.. தனிமைப்படுத்தப்படும் தெருக்கள்