சென்னையில் பல இடங்களில் அதிகாலை நேரங்களில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது தெரியவந்துள்ளது.
சென்னை உள்ள ஏழுகிணறு பகுதியில், கடந்த 30 ஆம் தேதி அதிகாலையில் 4 வழிப்பறி சம்பவங்கள் அரங்கேறியது. இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், நேற்று திருவெற்றியூர் ரயில் நிலையத்தில் செல்போன் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்த இருவரிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர்கள் இருவரும் சென்னையில் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றிவிட்டு, நெல்லூர் மாவட்டம் கசந்தரில் நடக்கும் “திருடர் குல விழாவில்” தவறாமல் பங்கேற்று வருவதாக கூறியுள்ளனர்.
மேலும், முழு பவுர்ணமி தினத்தை முன்னிட்டு நடக்கும் இந்த விழாவில் ஆட்டம், பாட்டம் என பல்வேறு கொண்டாடங்கள் அரங்கேறும் என்று கைது செய்ப்பட்ட கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், தென்னிந்தியாவில் உள்ள பெரிய திருடர்கள் அனைவரும் கலந்துகொள்வதால், அவர்களிடம் இவர்களை போன்ற திருடர்கள் தொடர்பை ஏற்படுத்தி கொள்ள இந்த விழாவில் கலந்துகொள்வதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ப்ளஸ் 1 தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு?.. எந்த இணையதளங்களில் பார்க்கலாம்!
- ‘3 புள்ளைக்கும் சொத்த கொடுத்துட்டு’.. ‘ஒருவேளை சாப்பாட்டுக்கு, படுக்க இடமில்லாம அனாதையா சுத்துரேன்’ முதியவர் உருக்கம்!
- ‘பள்ளிப்படிப்பை முடிக்காத கட்டிடக்கலை நிபுணர்’.. மனைவிக்காக கட்டிய வியக்க வைக்கும் அரண்மனை!
- ‘700 ஆண்டுகள் பழமையான சிலை.. 100 வருஷத்துக்கு முன் போலீஸில் புகார்’.. வீட்டுச் சுவரை இடித்து மீட்டெடுப்பு!
- வங்கக் கடலில் 48 மணிநேரத்தில் புயல்.. சென்னையில் மழைக்கு வாய்ப்பு?
- ‘ஏன் சென்னையில மட்டும் 12:07-க்கு நிழல் விழல?’.. ஏப்ரல் 24-ஆம் தேதியின் அறிவியல் அதிசயம் என்ன?
- மின்சாரம் தாக்கி யானை பலி.. மின்வேலிகளால் தொடரும் ஆபத்து!
- 'தலைக்கேறிய போதை'...'வாட்ஸ்ஆப் வீடியோ காலில்'...இளைஞர் செய்த விபரீத செயல்!
- 'கல்வீச்சு.. கலவரம்.. பேருந்துகள் நகராததால் முடங்கிய கோயம்பேடு..கொந்தளித்த மக்கள்’.. வீடியோ!
- தமிழகத்தில் 4 நாட்களில் ரூ.639 கோடிக்கு மது விற்பனை.. கதறும் டாஸ்மாக் வாடிக்கையாளர்கள்!