ஒரே அசதி... திருடப்போன இடத்துல தூக்கம் போட்ட ஆசாமி.. எழுப்பி கூட்டிட்டுப்போன போலீஸ்.. யாரு சாமி இவரு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சிவகங்கை அருகே திருடப் போன இடத்தில் மது போதையில் திருடன் ஒருவர் தூங்கி இருக்கிறார். அவரை போலீசார் கைது செய்த நிலையில், இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertising
>
Advertising

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | முதல் நாளே ஜடேஜாவுக்கு டெஸ்ட் வச்ச கோச் டிராவிட்.. மனுஷன் அசால்ட் பண்ணிட்டாப்ல..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள நடுவிக்கோட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன். அங்கே அவருக்கு பூர்வீக வீடு ஒன்று உள்ளது. இவர் காரைக்குடி பர்மா காலணியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். பணி நிமித்தமாக வெங்கடேசன் வெளியூர் சென்று இருந்த நிலையில் நடுவிக்கோட்டையில் உள்ள அவரது வீட்டின் வெளிக் கதவு திறந்து கிடந்திருக்கிறது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து வெங்கடேசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

Images are subject to © copyright to their respective owners.

இதனால் அதிர்ந்து போன வெங்கடேஷ் நடுவிக்கோட்டைக்கு விரைந்து வந்து இருக்கிறார். மேலும் வீட்டிற்குள் திருடன் இருப்பதாக சந்தேகித்த அவர் இது குறித்து நாச்சியாபுரம் காவல் துறையினருக்கு தகவல் அளித்திருக்கிறார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாச்சியாபுரம் காவல் துறை அதிகாரிகள் வீட்டிற்குள் சென்று சோதனை செய்திருக்கின்றனர். அப்போது வீட்டுக்குள்ளிருந்த மெத்தையில் ஒருவர் ஹாயாக தூங்கிக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை கைது செய்திருக்கின்றனர். மேலும் வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் கட்டப்பட்டு இருப்பதையும் போலீசார் கவனித்திருக்கின்றனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரிடம் நாச்சியாபுரம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் அதே ஊரை சேர்ந்த அஞ்சம்மை என்பவரின் மகன் சுதந்திர திருநாதன் என்பதும் அவர் மதுபோதையில் திருட சென்றபோது களைப்பு காரணமாக தூங்கியதும் தெரிய வந்திருக்கிறது.

வெங்கடேஷின் வீட்டின் பின்பும் உள்ள ஓட்டை கழற்றி உள்ளே இறங்கிய சுதந்திர திருநாதன், மதுபோதையில் அங்கிருந்த பொருட்களை மூட்டையாக கட்டியுள்ளார். அதன்பிறகு, ஓய்வெடுக்க அருகில் இருந்த மெத்தையில் படுத்து உறங்கியிருக்கிறார். இது தொடர்பான சிசிடிவி வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருட சென்ற இடத்தில் மதுபோதையில் திருடன் தூங்கிய சம்பவம் அப்பகுதி முழுவதும் வைரலாகி வருகிறது.

Also Read | அதிகாலையில் அதிர்ந்த நிலம்.. துருக்கி, நியூசிலாந்தை தொடர்ந்து இந்தியாவிலும் நிலநடுக்கம்.. அதிர்ச்சியில் மக்கள்..!

THIEF, SLEEP, STOLEN ITEMS, ARREST, POLICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்