'ஒழுங்கா' குடுத்துரு .. 'துப்பாக்கி' முனையில் பைக் கொள்ளை.. 'திருடனுக்கு' நேர்ந்த விபரீதம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஸ்மார்ட் போன்களின் வருகைக்கு பின்னர் எங்கே என்ன நடந்தாலும் அது நம் கண் பார்வைக்கு வந்து விடுகிறது. அந்த வகையில் பட்டப்பகலில் துப்பாக்கியை காட்டி பைக் கொள்ளையடிக்கும் வீடியோ ஒன்று வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

வீடியோவில் ஒருவர் விலையுயர்ந்த பைக் ஒன்றை ஓட்டி செல்கிறார். அப்போது பைக்கில் இருவர் அவருக்கு அருகில் வருகின்றனர். அதில் பின்னாடி அமர்ந்திருக்கும் ஒருவன் துப்பாக்கியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து பைக்கை  திருடுகிறான்.

பைக்கை பிடுங்கி அதில் ஏறி அமரும்போது சரியாக அங்கு வரும் டிராபிக் போலீஸ் ஒருவர், அந்த கொள்ளையனை துப்பாக்கியால் சுட, அவன் அங்கேயே சரிந்து விழுகிறான். துப்பாக்கியை எடுத்தவன் துப்பாக்கியாலேயே சுடப்படுகிறான்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்