'நேத்து இரவுல வந்த மாதிரி நைட்ல வரேன்'.. பேரம் பேசும்போது ரோல் ஆன திருடன்.. 'சிரிச்சு.. சிரிச்சு.. முடியலடா சாமி'...வைரல் ஆடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்செல்போன் திருடன் ஒருவன், உரிமையாளர் வீட்டிற்கு போன் செய்து பேரம் பேசுவதும், எப்போது வேண்டுமானாலும் நீங்க எனக்கு போன் பண்ணுங்க என்று சலுகையெல்லாம் கொடுப்பதுவுமான ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த ஆடியோவில் உரிமையாளரும் திருடனும் பேசிக்கொண்டவை,
உரிமையாளர்: நீங்க எடுத்துக்கொண்டு போனது எங்க அக்காவோட போன் தான்.
திருடன்: அப்படியா? சரி அதை நான் கண்டிப்பா குடுக்குறேன். ஆனா நீங்க 6 ஆயிரம் பணம் குடுத்துருங்க?
உரிமையாளர்: குடுக்குறங்க. நான் எங்க வந்து தரணும்னு சொல்லுங்க?
திருடன்: சரி.. நான் இன்னைக்கு எடத்த சொல்றேன் நானு.. சரியா? அதே மாதிரி பகல்ல முடியாது. நேத்து இரவுல(தூய தமிழு..) வந்தேன்ல அதே மாதிரி நைட்லதான் வருவேன். அந்த எடத்த சொல்லுவேன். சொன்னதும் நீங்க வந்துரணும்.
உரிமையாளர்: சரிங்க. அவங்க பால்வாடியில வேலை செய்றாங்க. அது கவர்மெண்ட் செல்போனு. அதான் கேக்குறேன். அதுக்கு கணக்குலாம் குடுக்கணும்.
திருடன்: ஓ.. கவர்மெண்ட் செல்லுன்னா என்ன? பால்வாடியில வேலை செய்றாங்களே.. அங்க தந்ததா.. சரி.. நா குடுத்துடுறேன். நா ஏமாத்தல்லாம் மாட்டேன். எனக்கு தேவ பணம்.. குடுத்துடுறியா?
உரிமையாளர்: ஆமா.. பணம் குடுத்துடுறேங்க.. சரி காசு எதனாது எடுத்துக்கிட்டீங்களா?
திருடன்: ஆமா, 16 ஆயிரம் இருந்தது. அவ்ளோதான்.
உரிமையாளர்: ஏங்கண்ணா.. அதான் செல்லு எடுத்துட்டு போனீங்களே? பணம் வெச்சிருந்துருக்கலாம்ல.. இல்ல பணத்த எடுத்துட்டு போனீங்களே.. காசு வெச்சுட்டு போயிருக்கலாம்ல?
திருடன்: அதான்யா மைண்ட்லா ஏறல.. நெனைச்சேன்.. (அப்டியே விட்டுட்டேன்.. ரெண்டையும் எடுத்துட்டு வந்துட்டேன்)
உரிமையாளர்: ஒரே வீட்ல இவ்ளோ ஆட்டய போடலாமா? உனக்கு மனசாட்சி இல்லயா?
திருடன்: (சிரிக்கிறார்) உண்மைதான்.
இதன் பிறகு இருவரும் 7 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரம், 5 ஆயிரம் என பேரம் பேசி ஒருவழியாக நைட்டுக்குள்ள 5 ஆயிரம் புரட்டி நாளைக்கு குடுங்க என அந்தத் திருடன் பேரத்தை பேசி முடிக்கிறான். இந்த ஆடியோ இணையத்தில் வெளியாகி சிரிக்க வைத்து, உண்டதையெல்லாம் செரிக்க வைத்துக்கொண்டு இருக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எங்க வந்து இந்த வேல பாக்குற?'.. நள்ளிரவில் இளைஞரை கட்டிவைத்து உதைத்த மக்கள்!
- ‘முதுகுல ஆப்ரேஷன்’.. ‘கஷ்டப்பட்டு நடந்த பாண்ட்யா’.. வைரல் வீடியோ..!
- ‘கொள்ளையடிக்கப் போன வீட்டில் இருந்ததைப் பார்த்து’.. ‘தலையில் அடித்துச் சென்ற திருடன்’..
- 'திருடப் போன இடத்துல.. ஊஞ்சல் எதுக்கு ஆடுன?'.. 'அது வேற ஒண்ணும் இல்ல சார்'.. போலீஸிடம் திருடன் சொன்ன 'வைரல்' காரணம்!
- ‘உள்ளங்கையில் அரிவாள் வெட்டு’.. ‘ஓட ஓட விரட்டிய கொள்ளையர்கள்’ சென்னை பீச்சில் இஞ்ஜினீயருக்கு நேர்ந்த சோகம்..!
- ‘திருவிழாவில் உற்சாக பாடியபோது’... ‘ஸ்டேஜில் சரிந்து விழுந்த இரும்புச் சாரம்'... வீடியோ!
- ‘ஓடும் ரயிலில் படிக்கட்டில்’... ‘செல்ஃபோன் பார்த்தபடி பயணித்த இளைஞருக்கு’... ‘4 பேரால் நேர்ந்த பயங்கரம்’!
- ‘அண்ணனைக் கொலை செய்தவரை மன்னித்து’.. ‘அடுத்து செய்த காரியம்’.. ‘அமெரிக்காவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்’..
- ‘4 வருஷத்துக்கு முன்னாடி நடந்தது’.. திடீரென வைரலாகும் ‘தல’ தோனி போட்டோ..!
- 'இதெல்லாம் அசால்ட்பா எனக்கு.. வேற எதனாவது இருக்கா?'.. 'தசராவில் தெறிக்கவிட்ட' பாட்டிமாவின் ரெக்கார்டு!