“அந்த அறிக்கை என்னுடையது அல்ல.. ஆனால் அதில் வந்திருக்கும் ‘இந்த’ தகவல்கள் உண்மை!” - போலி அறிக்கையை விட வைரல் ஆகும் ‘ரஜினியின்’ பரபரப்பு ட்வீட்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சமூக ஊடகங்களில் நடிகர் ரஜினிகாந்த் பெயரில் நேற்று இரவு முதல் ரஜினி கூறியதுபோல் ஒரு போலி அறிக்கை பரவி வருகிறது.
அந்த அறிக்கையில், ரஜினி மருத்துவர்கள் கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை கேட்டதாகவும், கொரோனா காலத்தில், தம் உடல் நலம் மற்றும் மக்களின் உடல் நலம் கருதி அரசியல் சேவையில் ஈடுபட வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவித்ததாகவும், சிறுநீரகப் பிரச்சனைகளுக்கு சிகிச்சை மேற்கொண்டதால் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதாகவும், அதனால் கொரோனா எளிதில் தொற்றிக்கொள்ளும் என்றும், இதன் காரணமாகவே கட்சி ஆரம்பிப்பது உள்ளிட்ட விஷயங்கள் தாமதமாவதாகவும் ரஜினி கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஜினி ரசிகர்களை குழப்பத்துக்குள்ளாக்கிய இந்த அறிக்கை வைரலாகிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில், இதுகுறித்து ரஜினியே மனம் திறந்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்.
இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்” என ரஜினி குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- திருமண அழைப்பிதழில்... தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்த ரஜினி ரசிகர்!.. வைரல் இன்விடேஷன்... 'இப்ப இல்லன்னா எப்பவும் இல்லை'!
- “இந்திய திரையுலக பாடகர்களுக்கு இல்லாத சிறப்பு எஸ்பிபிக்கு உண்டு - அது இதுதான்!” - நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் வீடியோ!
- "உங்களை அரியணையில் ஏற்றாமல் போவதுதான் ஒரே வருத்தம்" - கொரோனாவின் கோரப்பிடியில் ரசிகர். "ஒன்னும் ஆகாது கண்ணா.. தைரியமா இரு!" - நெகிழவைத்த ரஜினியின் ஆடியோ!.. கடைசியில் நடந்த மேஜிக்!
- சூடுபிடிக்கும் ஆடுகளம்.. 'சட்டமன்ற தேர்தலில்' இன்னும் டஃப் கொடுக்குமா 'சசிகலா விடுதலை?'!!
- எஸ்.பி.பியை ‘இப்படி’ குறிப்பிட்ட ரஜினி!.. ‘கூட்டுப் பிரார்த்தனை’ அழைப்பில் மனதை உருக வைத்த ‘வார்த்தை!’
- 'ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கினார்'... 'இ-பாஸில் குறிப்பிடப்பட்டிருந்த காரணம்'... மாநகராட்சி விளக்கம்!
- 'லம்போர்கினி காரில் ரஜினிகாந்த்'... 'கேளம்பாக்கம் செல்ல இ-பாஸ் வாங்கினாரா'?... மாநகராட்சி ஆணையர் அதிரடி பதில்!
- “#கந்தனுக்கு_அரோகரா! .. மதத்துவேசமும் கடவுள் நிந்தனையும்...”.. ‘உக்கிரமாக’ கொந்தளித்த ரஜினி!
- “தமிழ்நாடு உருப்படுறதுக்கு சான்ஸ் இருக்கு என்பதையே இது காட்டுகிறது!”.. ‘ரஜினி அரசியல்’ விவகாரத்தில் அதிரவைத்த ‘துக்ளக்’ குருமூர்த்தி!
- இந்த தடவ மிஸ் ஆகாது... "சூப்பர்ஸ்டாரோட 'அரசியல்' இன்னிங்ஸ் 'நவம்பர்'ல ஆரம்பிக்கும்"... கருத்து தெரிவித்த அரசியல் புள்ளி!!