தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பா..? சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கொடுத்த விளக்கம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கன்னியாகுமரியில் குரங்கு அம்மை தொற்று கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இதுவரையில் கண்டறியப்படவில்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | "குரங்கு அம்மை பற்றி மக்கள் பயப்படவேண்டாம்.. ஆனா இத மட்டும் கட்டாயம் செஞ்சிடுங்க".. வலியுறுத்திய இந்திய அரசு.. முழு விபரம்..!

குரங்கு அம்மை

வைரஸ் தாக்குதலால் ஏற்படும் அரியவகை நோய் தான் இந்த குரங்கு அம்மை. இதில் மொத்தம் இரண்டு வகை மரபணுக்களை கொண்ட வைரஸ்கள் இருக்கின்றன. முதலாவது பிரிவைச் சேர்ந்த வைரஸ், மத்திய ஆப்பிரிக்க நாடுகளிலும் இரண்டாவது வகை மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் கண்டறியப்பட்டது. தற்போது 72 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த நோயினால் 16,000 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார ஆணையம் தெரிவித்திருக்கிறது.

குரங்கு அம்மை பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கம், சோர்வடைதல் ஆகியவை ஏற்படலாம். மேலும், இந்த நோயின் அறிகுறிகள் தோன்றிய 5 நாட்களுக்குள் உடலில் சிகப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். பின்பு அவை கொப்பளங்களாக மாறும். அடுத்த 2-4 வாரங்களில் இந்தக் கொப்பளங்கள் மறைந்து உதிர்ந்து விடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு

இந்தியாவில் இதுவரையில் 3 குரங்கு அம்மை தொற்றுகள் பதிவாகியுள்ளன. இவை மூன்றுமே கேரள மாநிலத்தில் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் அவர்கள் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் குவாரண்டைனில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் அறிவித்திருக்கிறார்.

அமைச்சர் விளக்கம்

இதனிடையே அண்டை மாநிலமான கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்புகள் உறுதியானதை தொடர்ந்து கேரள எல்லையில் உள்ள மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே, இன்று கன்னியாகுமரியில் 4 பேருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருப்பதாகவும் அவர்களின் ரத்த மாதிரிகள் பூனேவுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இதனை மறுத்திருக்கிறார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் . கன்னியாகுமரியை சேர்ந்த 4 பேருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருந்ததாக வெளியான தகவல் உண்மையில்லை எனவும் தமிழகத்தில் குரங்கு பாதிப்பு இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

Also Read | "குரங்கு அம்மை நோய்க்கு இந்த மருந்தை Use பண்ணலாமா?".. ஐரோப்பிய யூனியன் சொன்னது என்ன?.. முழு விபரம்..!

DMK, MONKEYPOX, MONKEYPOX CASES, MINISTER, MA SUBRAMANIAN, HEALTH MINISTER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்