பரோட்டாவுக்கு காசா? அதுக்கு பதிலா என் பைக் எடுத்துக்கோங்க.. 33 வயசாகியும் கல்யாணம் ஆகல.. வைரலான வீடியோ.. போலீசார் விளக்கம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தேனி: பட்டப்படிப்பு படித்துவிட்டு மனநலம் பிறழ்ந்தவர் போல போலீசாரிடம் பேசும் இளைஞரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

கள்ளக்காதலன் வரும் நேரம் பார்த்து பெட்ரூமில் பதுங்கிய கணவன்.. வசமா சிக்கிய உடன் 2 பேரும் சேர்ந்து.. உச்சக்கட்ட பயங்கரம்

சமூகவலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக ஒரு இளைஞரின் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பேசிய அந்த இளைஞர், 'நான் ஒரு வீட்டுக்குள்ள நாய் நுழைவது போல நுழைந்தேன். அப்போ  ஆசையைத் தூண்டும் வகையில் புல்லட் நின்றிருந்தது. அதை எடுத்துக் கொண்டு ஆண்டிப்பட்டி கனவாய் வழியாக வந்தேன். அங்குள்ள சோதனைச் சாவடி அருகே வண்டியின் செயின் அவிழ்ந்ததால் புல்லட்டை அங்கேயே நிறுத்திவிட்டு, போடி ரோட்டில் உள்ள கோடாங்கிபட்டிக்கு போதைப்பொருள் வாங்க வந்தேன்' என கேசுவலாகப் பேசுகிறார்.

அதோடு அந்த வீடியோவில், தமிழக முதல்வரின் சாதனைகள் குறித்தும், அண்மைகால அரசியல் நிலவரம் குறித்தும் தமிழிலும், ஆங்கிலத்திலும் சரளமாக பேசியுள்ளார். அதோடு அந்த வீடியோவில் தேனி மாவட்ட பழனிசெட்டிபட்டி காவல் நிலைய ஆய்வாளர் மதனகலா என்பவர், 'இறுதியாக நீ எப்போது வருகிறாய்?' என கேட்பது போல அந்த வீடியோ முடிகிறது.

வைரலான வீடியோ:

இந்த வீடியோ இணையங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் மதனகலாவிடம் கேட்ட போது, 'கடந்த பிப்ரவரி 19-ம் தேதி பொதுமக்கள் அந்த இளைஞரை காவல் நிலையத்துக்கு அழைத்துவந்துவிட்டனர். அவரிடம் விசாரித்தபோது, உசிலம்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (33) என்பதும் எம்.பி.ஏ, பி.எட் படித்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

பைக்கை வைத்துக் கொள்ளுங்கள்:

இதுவரை அவர் சுமார் 50 பைக்களை திருடியிருக்கிறார். ஆனால், அந்த பைக்குகளை விற்று பணமாக்கும் நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை. எங்காவது நிறுத்திவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். குறிப்பாக இளநீரை குடித்துவிட்டு பணம் கொடுக்காமல் அதற்கு பதிலாக புல்லட்டை வைத்துக் கொள்ளுங்கள், ஹோட்டல்களில் புரோட்டா சாப்பிட்டுவிட்டு அதற்கு பதிலாக இந்த பைக்கை வைத்துக் கொள்ளுங்கள் என டீல் செய்து கிளம்பி விடுவார்.

இவர் மீது மதுரை, உசிலம்பட்டி, தேனி காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளன. கடந்த 2 நாள்களுக்கு முன்பு தேனி அரசு மருத்துவமனைக்கு சென்று ஏன் குப்பையை வெளியே கொட்றீங்க என அங்குள்ளவர்களிடம் பிரச்சனை செய்துள்ளார். அதேபோல திறந்துள்ள சில வீடுகளுக்குள் சென்று ஏன் இப்படி திறந்து போடுறீங்க, இதனால தான் திருட்டு நடக்குதுனு கருத்தாகவும் பேசியுள்ளார்.

திருமணம் செய்து வைக்கவில்லை:

அவரின் ஒரே குறை தன் அம்மா 33 வயதாகியும் தனக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.  தன் அண்ணா ராணுவத்தில் உள்ளார் என்று அவர் தெளிவாக பேசினாலும், போதைப்பழக்கத்தால் மனப்பிறழ்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அவரிடம் விசாரித்து அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்து அனுப்பி வைத்தோம். தேர்தல் நாள் என்பதால் அதில் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை. இதுபோன்ற நபர்கள் வெளியே சுற்றி கொண்டிருக்கிறார்கள் என விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் வீடியோ எடுத்து போலீஸ் வாட்ஸ் அப் குழுவில் பதிவிட்டேன். இந்த வீடியோ பெரிய அளவில் வைரல் ஆகும் என எதிர்பார்க்கவில்லை' என இன்ஸ்பெக்டர் மதனகலா கூறியுள்ளார்.

அமெரிக்க பெண்ணை 6 வாரம் டார்ச்சர் செய்த 3 ஈக்கள்.. எப்படி உடம்புக்குள்ள வந்துச்சு? இந்திய மருத்துவர்கள் செய்த சாதனை

THENI, YOUNG MAN, MENTALLY ILL, GRADUATION, தேனி, கல்யாணம், பட்டப்படிப்பு, மனநலம் பிறழ்ந்தவர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்