ஷூவுக்குள்ள ‘ஏதோ’ இருக்கு... அலறிய ‘சிறுமி’... ‘அவசரத்தில்’ பள்ளிக்கு கிளம்பியபோது நடந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தேனி அருகே ஷூவுக்குள் பாம்பு பதுங்கியிருப்பதை சிறுமி முன்கூட்டியே கவனித்ததால் அதிருஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மகள் அவந்திகா (9) அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை பள்ளிக்குச் செல்வதற்காக புத்தகப் பையை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்த அவந்திகா அவசர அவசரமாக தனது ஷூவை எடுத்து காலில் மாட்ட முயன்றுள்ளார்.

அப்போது ஷூவுக்குள் ஏதோ இருப்பதை உணர்ந்த அவர் அதை தூக்கி கீழே வீசிவிட்டு சத்தம் போட்டுள்ளார். அதைக் கேட்டு அங்கு வந்த பெற்றோரிடம் ஷூவுக்குள் ஏதோ பாம்பு போல இருப்பதாக அவர் கூற, உடனடியாக அவர்கள் ஷூவின்மீது பாத்திரம் ஒன்றைப் போட்டு மூடியுள்ளனர்.

பின்னர் பாம்பு பிடிக்கும் நபரான கண்ணன் என்பவருக்கு அவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர் லாவகமாக அந்தப் பாம்பை பிடித்து மலைப்பகுதியில் கொண்டுபோய் விட்டுள்ளார். சிறுமி ஷூவுக்குள் பாம்பு இருப்பதை சரியான நேரத்தில் கவனித்ததால் அவர் அதிருஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

SCHOOLSTUDENT, GIRL, SHOES, SNAKE, THENI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்