கதவை உடைச்சு உள்ள போய் தோடை மட்டும் தூக்கிட்டு போன பலே திருடர்கள்.. ஒருநிமிஷம் குழம்பிப்போன போலீஸ்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தேனியில் வீடு புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Advertising
>
Advertising

Also Read | இந்த Resume எப்படி செலக்ட் ஆகாம போகும்னு பாக்குறேன்.. கூகுளில் வேலைக்காக இளைஞர் உருவாக்கிய அடடே Resume.. வைரலாகும் Pic..!

தேனி மாவட்டம், பெரிய குளம் அருகே தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் முத்துக் குமார். இவருடைய மனைவி உமாவிற்கு திருப்பூரில் பணி மாறுதல் கிடைத்ததை அடுத்து, இவர்களது குடும்பம் திருப்பூரில் குடியேறியிருக்கிறது. அங்கேயே ஒரு வீட்டில் முத்துக்குமார் - உமா தம்பதி தங்கி பணி செய்து வந்த நிலையில், தாமரைக் குளத்தில் இருந்த அவர்களது வீடு பூட்டிக் கிடந்திருக்கிறது. இதனை அறிந்த ஒரு திருட்டு கும்பல் சில தினங்களுக்கு முன்னர் தங்களது கைவரிசையை காட்டியுள்ளது.

முத்துக் குமாரின் வீட்டை கடப்பாரையால் உடைத்து திறந்திருக்கும் திருடர்கள், வீட்டில் இருந்த இரண்டு பீரோவையும் உடைத்து இருக்கிறார்கள். ஆனால், அப்போதுதான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. பீரோவில் இருந்த நகைகள் அனைத்தும் கவரிங் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள் திருடர்கள். தொடர்ந்து, கவரிங் நகைகளை அப்படியே விட்டுவிட்டு பீரோவில் ஓரமாக இருந்த 6 கிராம் எடையுள்ள தங்க தோடை கண்டுபிடித்து அதை மட்டும் தூக்கிச் சென்றிருக்கிறார்கள். அதனுடன், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5000 ரூபாய் பணமும் திருடர்களால் எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து அடுத்த நாள் காலை முத்துக் குமாரின் வீடு திறந்து கிடப்பதை அறிந்த அண்டை வீட்டினர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். இதனையடுத்து பெரியகுளம் தென்கரை காவல்நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்திருக்கின்றனர். முத்துக் குமாரின் வீட்டில், போலீசார் ஆய்வை மேற்கொள்ள, மோப்ப நாயும் அங்கே வரவழைக்கப்பட்டிருக்கிறது.

தடயங்களை திரட்டும் நோக்கில் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக விசாரணையில் இறங்கியுள்ள போலீசார், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். வீட்டை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள் கவரிங் நகைகளை அப்படியே விட்டுவிட்டு 6 கிராம் எடையுள்ள தங்க தோடை மட்டும் கண்டுபிடித்து தூக்கிச் சென்ற சம்பவம் தேனி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | "18 வயசு ஆகலையா?.. அப்போ செல்போனை தொட கூடாது".. கிராமத்தின் விநோத கட்டுப்பாடு.. அபராதம் வேற போடுறாங்களாம்..!

POLICE, THENI, STEALS, GOLD EAR RINGS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்