'வர்லாம் வர்லாம் வா'!.. ஜல்லிக்கட்டு மாதிரியே... தமிழின் பாரம்பரிய விளையாட்டு!.. தேனியை அதிரவைத்த 'பன்றி'பிடி போட்டி!.. தரமான சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தேனி மாவட்டத்தில் பன்றி பிடி போட்டி கொண்டாடப்பட்டுள்ளது, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையோட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைப்பெறுவது வழக்கம்.

சங்க காலத்தில் ஜல்லிக்கட்டு என்பது ஏறு தழுவுதல் என்றே அழைக்கப்பட்டது. காளையோடு மல்லுக்கட்டுதல், ஏறு தழுவுதல் என்றால், பன்றியோடு மல்லுக்கட்டுவது பன்றி தழுவுதல் தானே.

கழிவுகளிலும், அழுக்குகளிலும் புரண்டுத்திரியும் பன்றிகளை பார்த்தாலே, பல அடி தூரம் ஒதுங்கி செல்வோம். ஆனால், அப்படிப்பட்ட பன்றிகளை கட்டித் தழுவும் வினோத பன்றிபிடி போட்டி தேனியில் நடைப்பெற்றது.

தேனி மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது குறமகள் வள்ளிநகர் குடியிருப்பு. இங்கு தான் வினோத பன்றி பிடி போட்டி நடைப்பெற்றுள்ளது.

பன்றிப்பிடி பற்றி அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், விவசாய உழவிற்கு காளை மாடுகள் பயன்படுத்தப்படுவது அனைவரும் அறிந்ததே. ஆனால், சங்ககாலத்தில், விவசாய உழவுக்குப் காளைகளுக்கு முன்னர் பன்றிகள் தான் பயன்படுத்தப்பட்டன.

இதற்கான ஆதாரம் புறநானூற்றின் பாடான் திணையில் உள்ளதாகவும், இதனை மையமாக வைத்துதான் பன்றிபிடி போட்டியைத் திட்டமிட்டதாகவும் தெரிவித்தனர்.

ஜல்லிக்கட்டுப் போட்டி போலவே இதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளும், விதிகளும் இருக்கின்றன. சுமார் 70 முதல் 100 கிலோ எடைகொண்ட பன்றிகள் மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள தகுதி உடையவை.

வாடிவாசல் போலவே, ஆரம்பக்கோட்டில் இருந்து அவிழ்த்துவிடப்படும் பன்றியை எல்லைக்கோட்டை நெருங்காத வண்ணம், அதன் பின்னங்காலை மட்டுமே பிடிக்க வேண்டும்.

சுமார் 80 கிலோவுக்கு மேல் இருக்கும் பன்றியின் பின்னங்காலைப் பிடித்தால், அது பிடிப்போரையும் சேர்த்து இழுத்துச் செல்லும். அதனையும் மீறி பன்றியைப் பிடித்து நிறுத்துபவர்களே வெற்றியாளர்களாக கருதப்படுகிறார்கள்.

இந்தப் போட்டியில் மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய பகுதிகளை சேர்ந்த பன்றிகள் கலந்துக்கொண்டன. வெற்றிபெற்ற பன்றிகளுக்கும், பன்றிபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

அந்த வகையில், பன்றிகளை களமிறக்கி நடைபெறும் பன்றிபிடி போட்டி பலரையும் ஆச்சர்யத்திலும், வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்