“திடீர்னு இப்படி பண்ணிட்டாளே!”.. கதறி அழுத தந்தை.. திருமணமான நபரை காதலித்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கதி.. விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி உண்மை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நாடார் தெருவை சேர்ந்த முருகன் என்கிற 42 வயது நபரின் மகள் தவமணி.
தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்த தவமணி தான் வசிக்கும் பகுதியை சேர்ந்த திருமணமான நபர் ஒருவர் காதலித்து வந்ததாகவும், இந்த விவகாரம் தெரிந்து முருகன் தவமணியை கண்டித்ததாகவும் அதன் பிறகும் தவமணி அந்த நபருடன் பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதற்கு ஒரு முடிவு கட்ட நினைத்த முருகன் தவமணிக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த தவமணி தனது குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமான முருகன் தவமணியை அடித்தது மட்டுமன்றி துப்பட்டாவால் கழுத்தை நெரித்துள்ளார். இதனையடுத்து மூச்சு திணறி வீட்டிலேயே தவமணி உயிரிழந்ததாக தெரிகிறது. ஆனால் தனது மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்களுக்கு தகவல் சொன்ன முருகன் தவமணியின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்.
எனினும் முருகனின் நாடகம் குறித்து சந்தேகத்தை மக்கள் போலீசாருக்கு தெரிவித்ததன் அடிப்படையில் விரைந்து வந்த போலீஸார் முருகனை விசாரித்து அவர் செய்த நாடகத்தை கண்டு பிடித்தனர். மேலும் முருகனும் தவமணியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்திருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி, தவமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார். பெற்ற மகளை கழுத்தை நெரித்து கொலை செய்து நாடகமாடிய தந்தை முருகனை கைது செய்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'விடுமுறைக்கு வந்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி'... 'இரக்கமின்றி பெற்ற தந்தையே செய்த பயங்கரம்'... 'வெளியான பதறவைக்கும் சிசிடிவி பதிவு!'...
- ‘துடிதுடித்து அலறிய மரண ஓலம்!’.. ‘அதிர்ச்சியை தந்த’ மாணவிகளின் செயல்கள்!.. அடுத்தடுத்த சோக சம்பவங்கள்!
- “படிச்சது இன்ஜினியரிங்”.. “பார்ட் டைமாக பர்னிச்சர்.. முழு நேரமாக.. பேஸ்புக்கில் பார்த்த காமுக வேலை!”.. அதிர்ச்சி அடைந்த ‘பெண்ணின் கணவர்!’
- "சுத்தியலால் தாக்கப்பட்ட மருத்துவர் இவர்தான்.. 2 பேரும் ஏற்கனவே தெரிஞ்சவங்க!".. ‘கொலைக்கான காரணம்?’.. போலீஸ் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்கள்!
- அம்மா....! நள்ளிரவில் கேட்ட 'அலறல்' சத்தம்... பறிபோன 4 வயது சிறுவனின் உயிர்... கதறித்துடித்த பெற்றோர்!
- வன்முறை.. தாக்குதல்.. உயிர் பலி.. துப்பாக்கிச் சூடு.. பேஸ்புக் பதிவால் கலவர பூமியான பெங்களூரு!..144 தடை உத்தரவு! நடந்தது என்ன? பரபரப்பு வீடியோக்கள்!
- “காப்பாத்துங்க!!”.. நோயாளி உள்ளே சென்றதும் டாக்டரிடம் இருந்து வந்த மரண ஓலம்.. எட்டிப்பார்த்தவர்களின் ஈரக்குலை நடுங்கிய ‘பதைபதைப்பு’ சம்பவம்!
- 'விவாகரத்துக்கு' அப்புறம் இப்படி பண்ணிட்டாளே... மகளின் செயலால் 'மனமுடைந்து' தாய்-தந்தை தற்கொலை!
- 'கழுத்துல தாலி இல்ல, வயித்துல நீர்கட்டின்னு சொன்னத நம்புனோமே'... 'ஹாஸ்பிடல் போனதும் பிறந்த குழந்தை'...சென்னையில் நடந்த திடுக்கிடும் சம்பவம்!
- "இந்த நேரத்துல என்னயா வியாபாரம்"... சோளத்த 'ரோட்டு'ல தூக்கி போட்டு... 'தள்ளுவண்டி'யை தலைகீழா புரட்டி... அராஜகம் செய்த 'எஸ்.ஐ'... சர்ச்சையை கிளப்பிய 'வீடியோ'!!!