கடந்த வாரம் திருச்சி லலிதா ஜுவல்லரியில் பொம்மை மாஸ்க் அணிந்து திருடர்கள் 13 கோடிக்கும் அதிகமான நகைகளை திருடிச் சென்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மீண்டும் அதுபோன்ற ஒரு கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. திருச்சி தாளக்குடி பகுதியில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் பயிற்சி மையம் ஒன்று இயங்கி வருகிறது.இங்கு 20-க்கும் மேற்பட்ட பெண்கள் தையல் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு அந்த பயிற்சி மையத்தின் கதவை உடைத்துக்கொண்டு திருடுவதற்காக 2 திருடர்கள் உள்ளே வந்துள்ளனர்.அங்கு கண்காணிப்பு கேமரா இருப்பதை பார்த்ததும் அவர்கள் இருவரும் வெளியில் சென்றனர்.தொடர்ந்து வாசலில் இருந்த குப்பைக்கூடையை முகமூடியாக்கி மீண்டும் அவர்கள் இருவரும் உள்ளே நுழைந்துஅங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.2500 பணத்தை மட்டும் திருடி சென்றுள்ளனர்.
இதைத்தொடர்ந்து பயிற்சி மையத்தின் நிர்வாகி சமயபுரம் டோல்கேட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.போலீசார் இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘லலிதா ஜுவல்லரி கடையில்’... ‘நகைகள் கொள்ளைப்போன’... 'சிசிடிவி காட்சிகள் வெளியீடு'!
- ‘அரை நிர்வாணம், நோட்டமிட 4 பேர், பூட்டை உடைக்க 2 பேர்’.. மிரள வைத்த கொள்ளையர்கள்.. பீதியில் உறைந்த மக்கள்..!
- பிரபல லலிதா ஜுவல்லரி கடையின் சுவரை துளையிட்டு நூதன முறையில் கொள்ளை..! பரபரப்பு சம்பவம்..!
- ‘பின்னோக்கி இறங்கியபோது’.. ‘லிஃப்ட் கதவில் சிக்கிய குழந்தை போராடி மீட்பு’..
- ‘பள்ளி மாணவரை அடித்த ஆசிரியரை’.. ‘வகுப்பறையிலேயே புகுந்து’.. ‘சரமாரியாகத் தாக்கிய குடும்பத்தினர்’..
- நடந்து சென்ற பெண் பத்திரிக்கையாளரிடம் செல்போன் பறிப்பு..! பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்..!
- ‘திருமண மண்டபங்களில் குழந்தைகளை குறிவைத்து’... ‘நகைகளை திருடிச் செல்லும் நபர்'!
- தானாக நகர்ந்து சென்ற ‘வீல்சேர்’.. ஹாஸ்பிட்டல் சிசிடிவி-ல் சிக்கிய திகில் வீடியோ..!
- ‘ஓடும் ரயிலில் ஏற முயற்சித்த இளைஞருக்கு’.. ‘நொடியில் நடந்த விபரீதம்’..
- வரதட்சணை கேட்டு மருமகளை தாக்கிய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி..? பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்..!