'நேசமணியை டிரெண்டிங் செய்த இளைஞர் இவர்தான்'!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நேசமணி கான்ட்ராக்டர் உலக அளவில் ட்ரென்ட் ஆக காரணமான விக்னேஷ் பிரபாகர் என்னும் சிவில் இன்ஜினீயரின் பேஸ்புக் பக்கம், லைக்ஸ்களை அள்ளி குவித்துள்ளது. 

`Civil Engineering Learners' என்ற ஃபேஸ்புக் பக்கம் ஒரு சுத்தியல் படத்தைப் பதிவிட்டு `உங்கள் ஊரில் இதற்கு என்ன பெயர்' எனக் கேட்க விக்னேஷ் என்பவர், `இதன் பெயர் சுத்தியல், இதை எதிலாவது அடித்தால் டங் டங் எனச் சத்தம் வரும். பெயின்டிங் கான்ட்ராக்டர் நேசமணி தலை இதனால்தான் உடைந்தது. பாவம்' எனப் பிரபல ஃபிரெண்ட்ஸ் பட காமெடி சீனை நினைவுபடுத்தி கமென்ட் செய்தார்.

இது நேசமணியை தற்போது உலக அளவில் ட்ரென்ட் ஆக்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் புதூர்தான் விக்னேஷ் பிரபாகருக்கு சொந்த ஊர். பள்ளி படிப்பை அருப்புக்கோட்டையில் முடிச்ச இவர், சிவகாசியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில், சிவில் இன்ஜினீயரிங் படித்துள்ளார். அதன்பின்னர், அவரது தந்தையின் மூலம் துபாயில் கிடைத்த வேலையில் பணியாற்றி வருகிறார்.

நேசமணி உலக அளவில் ட்ரென்ட் ஆனதும் இவரது மெசேஜ், வாட்ஸ்அப் எல்லாம் நிரம்பி செல்போன் ஹேங் ஆகிவிட்டதாக விக்னேஷ் பிரபாகர் கூறியுள்ளார். ஓப்பன் பண்ணாத மெசேஜே இன்னும் நிறைய இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

'சும்மா 10, 12 பேரு லைக் பண்ணுவாங்கனுதான் நினைச்சேன். ஆனா இவ்ளோ ட்ரென்ட் ஆகும்னு நினைக்கல. திட்டமிட்டலாம் பண்ணலை.  துபாய்ல இருக்கிறதனால,  நான் டி.வி.ல பார்க்க முடியல, இத விளையாட்டாக பண்ணினது. யாரும் தவறாக எடுத்துக்க வேண்டாம் என்று தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவுசெய்து வெளியிட்டுள்ளார்.

NESAMNI, PRAYFORNESAMANI

மற்ற செய்திகள்