கான்ஸ்டபிள் தகுதி தேர்வு.. போலீஸ் ஆக ஆசைப்பட்டு சிக்கிய பெண்.. மிரண்டு போன அதிகாரிகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புதுச்சேரி: காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வுக்கு வந்த பெண் ஒருவர், உடல் எடையை அதிகரித்து காட்ட, ஆடைமேல் ஆடையாக, நான்கு பேண்ட் அணிந்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertising
>
Advertising

காவலர் பணிக்கான உடற்பயிற்சி தேர்வு

புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள 390 கான்ஸ்டபிள், 12 ரேடியோ டெக்னீசியன், 29 டேக் ஹேண்ட்லர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான உடல் தகுதித் தேர்வு கடந்த 19-ம் தேதி கோரிமேடு போலீஸ் மைதானத்தில் தொடங்கி நடந்து வருகிறது. இதில், நாள்தோறும் 750 பேர் அழைக்கப்பட்டு உடற்தகுதி தேர்வு நடக்கிறது. இதுவரை நடந்து முடிந்த உடற்தகுதி தேர்வில், 1844 ஆண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொற்று காரணமாக தேர்வில் பங்கேற்க முடியாத ஆண்களுக்கு, வரும் 21-ஆம் தேதி உடல் தகுதி தேர்வு நடக்கிறது.

பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு

மொத்த கான்ஸ்டபிள் பணியிடத்தில் 32 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது.  200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய தேர்வுகள் நடத்தப்படுகிறது. நேற்றைய தேர்வுக்கு அழைக்கப்பட்ட 750 பேரில், 324 பேர் மட்டுமே பங்கேற்றனர். இதில், உடற் தகுதியுடன் 188 பேர் தேர்வு செய்யப்பட்டனர். குறிப்பாக பெண்களுக்கும்  45 கிலோ எடை இருக்க வேண்டும்.

தில்லு முல்லு செய்த பெண்

ஆனால் நேற்றைய உடற்தகுதி தேர்வுக்கு வந்திருந்த பெண், மெலிந்த உடல் அமைப்புடன் இருந்தார். ஆனால், பெண்கள் உடற்தகுதிக்கு தேவையான 45 கிலோ எடையுடன் இருந்தார். அவரது நடந்து செல்லும் முறை சற்று விநோதமாக இருந்தது. இதனால், உடற்தகுதி தேர்வு நடத்திய உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சந்தேகம் எழுந்தது. உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அப்பெண்ணை வரவழைத்து, பெண் காவலர்கள் மூலம் சோதனை செய்ய உத்தரவிட்டனர்.

பெண்ணை கண்டித்த போலீஸ்

சோதனை செய்தபோது, அப்பெண் பேன்ட் மீது பேன்ட் அணிந்திருந்தார். ஒரு ஜீன்ஸ் மீது, 3 லோயர் பேன்ட் அணிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கூடுதலாக அணிந்திருந்த ஆடைகள் 2.2 கிலோ எடை இருந்ததை விசாரணையில் கண்டறியப்பட்டது. கான்ஸ்டபிள் தேர்வுக்கு வந்த அந்த பெண் 43 கிலோ எடையில் இருந்ததால், உடல் எடை அதிகரித்து காட்டுவதற்காக நான்கு பேண்டுகள் அணிந்து வந்துள்ளார். இதனையடுத்து, இந்த முறைகேட்டில் ஈடுபட்ட பெண்ணை, அதிகாரிகள் தகுதி நீக்கம் செய்து எச்சரித்து வெளியே அனுப்பினர்.

PUDUCHERRY, POLICE CONSTABLE, 45 KG WEIGHT, POLICE AUCTION, VAIRAL NEWS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்