உங்கள 'இன்ஸ்டால்' பண்ண வைக்குறதுக்காக தான் 'அப்படி' நம்ப வைக்குறாங்க...! 'ஆக்சுவலா அவங்களோட பிளானே வேற...' - கடும் எச்சரிக்கை விடுக்கும் போலீசார்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைப் போல வேகமாக பரவி வருகிறது போலி ஆக்சி மீட்டர் பயன்பாடு.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையில் பாதிக்கப்படுவோருக்கு பெரும்பாலும் மூச்சுத் திணறலும், நோயின் நிலை தீவிரமடையும் போது, இரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜன் அளவும் குறையும்.
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் அடிக்கடி ஆக்சி மீட்டர் பயன்படுத்தி தினசரி ஆக்சிஜன் அளவை அறிந்துக் கொள்ள வேண்டும் எனவும், ஆக்சிஜன் அளவு குறைந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியது.
இந்த அறிவிப்பினை தொடர்ந்து, ஆக்சி மீட்டர் பயன்பாடு அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்து, ஆக்சி மீட்டர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. ஆனால் இதையே தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய ஒரு சிலர் கள்ள சந்தையில் போலியான ஆக்சி மீட்டரை விற்று வந்தனர்.
அதோடு, ஆக்சி மீட்டர் கிடைக்காதவர்களுக்கு ஆன்ட்ராய்டு செயலிகள் மூலம் ஆக்சிஜன் அளவு அறிந்து கொள்ளலாம் என பல ஆப்கள் உருவாகின. பலர் அதை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து, செயலியில் இருக்கும் கேமரா, செல்போன் லைட் மூலம் ஆக்சிஜன் அளவை கணக்கிட்டனர்.
இதே ஐடியாவையும் பயன்படுத்தி போலி ஆக்சி மீட்டர் செயலிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த செயலியை பயன்படுத்தும் போது மொபைல் போனில் இருந்து தனிப்பட்ட அல்லது பயோமெட்ரிக் தரவை திருடப்படுவதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் கைரேகை பதிவு செய்யும் இந்த செயலி மூலம் வங்கி மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களும் திருடப்படுகிறது.
இதன்காரணமாக போலி ஆப்கள் அதிகமாக புழங்கும் மகாராஷ்டிரா, குஜராத் போன்ற ஒரு சில மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதோடு தமிழகத்தில் போலி ஆக்சி மீட்டர் ஆப் மூலம் தகவல் திருடப்படுவதாகவும், இந்த ஆப்களில் விரல் ரேகை பதிவு செய்ய வேண்டாம் என்றும் தமிழ்நாடு காவல்துறை தனது முகநூல் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், பொதுமக்களுக்கு ஏதாவது செயலி மேல் சந்தேகம் ஏற்பட்டால் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம். மேலும், தங்களது பயோமெட்ரிக் தகவல்களை முடக்குமாறு www.uidai.gov.in என்ற இணையளத்தில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'உருமாறிய கொரோனாவுக்கு எதிராக...' 'இந்த மருந்து சூப்பரா வேலை செய்யுது...' - ஒப்பதல் அளித்த மத்திய அரசு...!
- கோவிஷீல்டு 2ம் டோஸ் இடைவெளியை அதிகரித்தது ஏன்?.. பூதாகரமான சர்ச்சை!.. இடைவெளியை குறைக்க திட்டம்!?.. குழப்பத்தில் மக்கள்!
- 'கருப்பு, வெள்ளை, மஞ்சள் பூஞ்சை நோயைத் தொடர்ந்து...' 'அடுத்த கலர்' பூஞ்சை நோய்...! 'உறுதி செய்யப்பட்ட முதல் நபர்...' - மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு...!
- ஜெட் வேகத்துல 'டெல்டா பிளஸ்' பரவிட்டு இருக்கு...! 'இந்த நேரத்துல ஊரடங்கை தளர்த்துறது பெரிய ஆபத்துல போய் முடியும்...' அதிரடி 'முடிவு' எடுத்த நாடு...!
- செய்ய வேண்டியத 'சிறப்பா' செய்தாச்சு...! 'இனி தைரியமா போய் பணம் எடுங்க...' -ATM செக்யூரிட்டியின் நம்பிக்கை...!
- ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள்!.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு!.. முழு விவரம் உள்ளே
- எதுக்கு நாம 'ரிஸ்க்' எடுக்கணும்...! ஒரு வாரத்துக்காவது 'இந்தியால' இருந்து 'அத' வாங்காதீங்கப்பா...! ஏன்னா 'அந்த' பாக்கெட்ல 'செக்' பண்ணி பார்த்தப்போ... - சீனாவின் அதிரடி உத்தரவு...!
- தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு!.. புதிய தளர்வுகள் அறிவிப்பு!.. என்னென்ன இயங்கும்?.. எவற்றுக்கு தடை?
- என்ன இப்படி இறங்கிட்டாங்க...? 'வைரலான திருமண விளம்பரம்...' - கடைசியில தெரிய வந்த ட்விஸ்ட்...!
- நாங்க 'டெஸ்லா' கார் தர்றோம்...! உங்களுக்கு 'ஐ-போன்' வேணுமா...? இதென்ன பிரமாதம்...! 'தங்கக்கட்டியே வாங்கிட்டு போலாம்...' - ஆனா நீங்க பண்ண வேண்டியது 'அது' மட்டும் தான்...!