'சென்னை அண்ணாசாலையில் செல்லும் வாகன ஓட்டிகளே’... ‘இந்த வழியை மாத்தியிருக்காங்க'... காரணம் இதுதான்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை அண்ணாசாலையில், 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் தொடர்பான பணிகள் நடைப்பெற்று வந்ததால், கடந்த சில ஆண்டுகளாக, அண்ணாசாலை- நந்தனம் சந்திப்பில், ஒருவழிப்பாதை போக்குவரத்து நடைமுறையில் இருந்துவந்தது. இதனால் வாகன ஓட்டிகள், பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். நேரத்திற்கு பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில், மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்ததால், நந்தனம் சந்திப்பில், சேமியர்ஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள், நேராக வி.என்.சாலை வழியாக தியாகராயநகருக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு இருவழிப்பாதையாக மாற்றப்பட்டது.

தற்போது, செனடாப் சாலையில் இருந்து வரும் வாகனங்கள், வலதுபுறம் திரும்பி அண்ணாசாலை வழியாக தேனாம்பேட்டை நோக்கி செல்வதற்கான போக்குவரத்து முறை வரும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்பிறகு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் தாங்கள் கூறும், கருத்துகளின் அடிப்படையில் அந்த வழியாக போக்குவரத்து தொடர்ந்து அனுமதிக்கப்படும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

ANNASALAI, CHENNAI, TRAFFIC, ROAD, METRO, TRAIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்