‘புறநகர் ரயில்களில் நேர கட்டுப்பாடு’... ‘நாளைமுதல் இவங்களுக்கு இல்ல’... 'வெளியான தெற்கு ரயில்வே அறிவிப்பு’...!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை புறநகர் மின்சார ரயில்களில், நாளை முதல் பெண்கள், குழந்தைகள் எந்த நேரமும் பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், பேருந்து, ரயில், விமான  போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்து. பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வந்தநிலையில், முதல்கட்டமாக, நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, சென்னை புறநகர் மின்சார ரயில்களில், அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், எந்த நேரமும் பயணித்து வந்தனர்.

அதன்பின்னர், கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில், அத்தியாவசிய பணியில் இல்லாத பெண்கள், குழந்தைகள் புறநகர் மின்சார ரயிலில் பயணிக்க, நேரக்கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், நாளை முதல், நேரக்கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்டு, அனைத்து பெண்கள், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், எந்நேரமும், புறநகர் மின்சார ரயிலில் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணம் மார்க்கங்களில் திங்கட்கிழமை முதல் மின் ரயில் சேவை இயக்கப்படும் எனவும், பயணத்தின் போது மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்