நீல நிறமாக மாறிய இட்லி மாவு.. பெத்த மகனே இப்படி பண்றது ஏத்துக்க முடியல.. வேதனையில் அப்பா, அம்மா

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விழுப்புரம்: சொந்த மகனே அப்பா அம்மாவிற்கு விஷம் வைத்து தீர்த்துக் கட்ட முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீல நிறமாக மாறிய இட்லி மாவு.. பெத்த மகனே இப்படி பண்றது ஏத்துக்க முடியல.. வேதனையில் அப்பா, அம்மா
Advertising
>
Advertising

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த சிறுவை கிராமத்த்தில் வசித்து வருபவர் விவசாயி தம்புசாமி (78) இவரது மனைவி தனகோடி (70) இவர்களுக்கு தமிழரசன், மோகன்தாஸ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

விவசாயம் செய்யும் அப்பா:

தம்புசாமி தன்னுடைய 2.5 ஏக்கர் விவசாய நிலத்தை நம்பியே விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலம் தம்புசாமியின் தனது மனைவி தனகோடி பெயரில் உள்ளது. அதோடு அந்த நிலத்தில் 2-ஆவது மகன் மோகன்தாஸும் தற்போது விவசாயம் செய்து வருகிறார்.

நீல நிறமாக இருந்த இட்லி மாவு:

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இட்லி தயார் செய்வதற்காக தனகோடி இட்லி மாவினை எடுத்து பார்த்துள்ளார். அப்போது மாவின் நிறம் நீல நிறமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த தம்புசாமி மற்றும் தனகோடி தம்பதியினர் இந்த சம்பவம் குறித்து மனு ஒன்றை வழங்கியுள்ளார்.

அதில், 'என் மகன் கடந்த 5 ஆண்டுகளாக எங்கள் இருவரையும் சரியாக கவனிக்காமல் உணவு கூட அளிக்காமல் துன்புறுத்தி வருகிறார். மோகன்தாஸ் எப்போதும் எங்களிடம் அந்த விவசாய நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதிக்கொடுக்கும் படி கேட்பார்.

எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை:

கடந்த ஒரு வாரமாக எங்கள் இருவரையும் அடித்து துன்புறுத்தி வருகிறார். இதுதொடர்பாக மயிலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போனவாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த மோகன்தாஸ், எங்கள் இருவரையும் வீட்டை விட்டு வெளியேற சொன்னார்.

தீர்த்துக்கட்ட சதி:

ஆனால் நாங்கள் எங்களுடைய வீட்டிலேயே இருந்தோம். இப்போது சொத்துக்காக பெற்ற மகனே உணவில் விஷம் வைத்து எங்களை தீர்த்துக்கட்ட சதி செய்துள்ளது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதுபற்றி மோகன்தாசிடம் கேட்டதற்கு சொத்துக்களை எனக்கு எழுதி தராத நீங்கள் எதற்காக உயிரோடு இருக்க வேண்டுமென கூறியதோடு மாவில் பூச்சி மருந்தை கலந்ததாகவும் கூறினார்' என புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரை பெற்ற அதிகாரிகள், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.

SON, FATHER, MOTHER, IDLY FLOUR, மகன், அப்பா, அம்மா, இட்லி, மாவு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்