‘கொள்ளிடம் ஆற்றை கடக்கும்போது’... ‘திடீரென கவிழ்ந்த படகால் சோகம்’... ‘பதறிய கிராம மக்கள்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றை கடக்க முயன்றபோது, படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் தென்கரையில் உள்ளது கீழராமநல்லூர். இங்கிருந்து அக்கரையில் உள்ள மேலராமநல்லூர் கிராமத்திற்கு, படகில் 30 பேர் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாரதவிதமாக கொள்ளிடம் ஆற்றின் நடுவே செல்லும் போது, படகு கவிழ்ந்தது. இதனால் அதில் பயணம் செய்த கிராம மக்கள் அலறினர். 30 பேரில் 10 பேர் மீட்கப்பட்டநிலையில், ஆற்றின் நடுவே இருந்த மணல் திட்டில் 10 பேர் தஞ்சம் அடைந்தனர். படகில் சென்று நீரில் மூழ்கிய மீதமுள்ள 10 பேரின் கதி என்ன ஆனது என தெரியாததால், முதலில் பதற்றம் நிலவியது.
இதையடுத்து அவர்களை தேடும் பணியில் கிராம மக்கள் மற்றும் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர். கொள்ளிடம் ஆற்றில் 3 நாட்களாக அதிக அளவில் நீர் செல்வதால், படகு நீரில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. மேலும், மேலராமநல்லூர், கீழராமநல்லூர் இடையே படகு போக்குவரத்தை நம்பியே, அந்தப் பகுதி மக்கள் உள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். இதற்கிடையே, மீதமுள்ள 10 பேரை தேடும் பணி தீவிரமாக நடைப்பெற்று வந்த நிலையில், 10 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
'2 நாள்தான் பாக்கல'.. ஆனாலும் 'இனம்.. நிறம்' கடந்த அன்பைப் பரிமாறி.. நெகிழ்ந்த 'லிட்டில்' நண்பர்கள்!
தொடர்புடைய செய்திகள்
- நிவாரண பொருள் கொண்டு செல்லும் வழியில் வெடித்து சிதறிய ஹெலிகாப்டர் ..! 3 பேர் பலியான பரிதாபம்..!
- 'ஜஸ்ட் மிஸ்'.. சிறுமியின் சமயோஜிதத்துக்கு குவியும் பாராட்டுக்கள்.. ஆனாலும் நேர்ந்த சோகம்!
- 'கண்டவரோட சேத்து வெச்சா பேசுற'.. 'இனி நான் நிம்மதியா இருப்பேன்'.. மனைவி அதிரடி!
- 'முதலிரவு இப்ப முக்கியமா? மொதல்ல இதுக்கு பதில் சொல்லிட்டு போ'.. திருமணத்தன்று நடந்த சோக சம்பவம்!
- 'மகளின் திருமண பேச்சுக்காக சென்றவரும் கண்ணாடியை உடைத்துக்கொண்டு சாலையில் விழுந்து பலி’.. விபத்தான அரசுப்பேருந்தால் சோகம்!
- திடீரென வானத்தை நோக்கி 9 முறை சுட்ட அதிகாரி.. ’ஏன் இப்படி செஞ்சார்’..