பூட்டுக்கு மேல் 'பூட்டு' .. காலையில் கடையை திறக்க சென்றவர்களுக்கு நேர்ந்த 'அதிர்ச்சி'..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வடமாநிலத்தவரின் கடைகளுக்கு இரவோடு இரவாக மேல் பூட்டுப் போடப்பட்டுள்ளதுடன் தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தும் சுவரோட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

தஞ்சையில் டைல்ஸ், இரும்பு பொருட்கள், பலகாரங்கள் உள்ளிட்ட கடைகளை நடத்தி வரும் வடமாநிலத்தவர்கள் நேற்று இரவு கடைகளை பூட்டிச் சென்ற நிலையில், இன்று காலை கடைக் கதவுகளில் கூடுதல் பூட்டுகள் பூட்டப்பட்டிருந்ததுடன், தமிழ் தேசியக் கட்சி பெயரில் வட மாநிலத்தவருக்கு எதிரான எச்சரிக்கைச் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. வழக்கம்போல் காலையில் கடைகளை திறக்கச் சென்ற வடமாநிலத்தினர் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதேபோன்று புதுக்கோட்டையில் வடமாநிலத்தவர்களின் எலக்ட்ரிக்கல் கடை, டிரேடர்ஸ் உள்ளிட்டவற்றில் இரவோடு இரவாக மேல் பூட்டு போடப்பட்டுள்ளதோடு வடமாநிலத்தவருக்கு எதிரான வாசகங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதனால் வடமாநிலத்தினர் இன்று கடைகளை திறக்கவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மற்ற செய்திகள்
நான் அவுட் இல்ல... அடம்பிடித்த இளம் வீரர்... அம்பயருடன் வாக்குவாதம்... 10 நிமிடங்கள் நின்றப் போட்டி!
தொடர்புடைய செய்திகள்