'ஆண்கள் ஆபாச வீடியோவ...' 'போலீசோட நம்பருக்கே அனுப்பிருக்கார்...' வசமாக சிக்கிக்கொண்ட அறிவியல் ஆசிரியர்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவையை சேர்ந்த அறிவியல் ஆசிரியர் ஆபாசப் படங்களை தன் நண்பர்களுக்கு அனுப்புவதற்கு பதில் ராமநாதபுரம் மாவட்ட குறை தீர்க்கும் பிரிவு செல்போன் நம்பருக்கு அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஜூன் மாதம் 17 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்ட குறை தீர்க்கும் பிரிவு செல்போன் எண்ணிற்கு ஒரு நம்பரில் இருந்து ஆண்களின் நிர்வாண புகைப்படங்களும், வீடியோக்களும் வந்துள்ளன. இதனை பார்த்த முதல்நிலைக் காவலர் கண்ணன் அதிர்ச்சியடைந்து, இவ்வளவு தைரியமாக போலீசாரின் நம்பருக்கு இம்மாதிரி ஆபாச புகைப்படங்களை அனுப்பியது யார் என விசாரிக்குமாறு, ராமநாதபுரம் போலீசில், காவலர் கண்ணன் புகார் அளித்தார்.

புகைப்படங்கள் அனுப்பிய செல்போன் நம்பர் குறித்து சைபர் க்ரைம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த செல்போன் எண் டவர் கோவையில் இருப்பதாகவும், அந்த செல்போன் எண் கோவையை சேர்ந்த பிரேம் கிரண் என்பவரது பெயரில் இருந்ததை கண்டுபிடித்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தனிப்படையினை கோவைக்கு அனுப்பி, பிரேம் கிரணை ராமேஸ்வரம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், 29 வயதான பிரேம் கிரண், பள்ளியொன்றில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருவதாகவும், அவர் ஒருபால் ஈர்ப்பு கொண்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் பிரேம் சொந்தமாக டியூசன் சென்டரும் நடத்தி வருவதாகவும், இவரது டியூசன் சென்டரில் 40-க்கும் அதிகமான மாணவர்கள் படிப்பதாக கூறப்படுகிறது. விசாரணையில் புகைப்படங்களை தன் நண்பருக்கு அனுப்புவதற்கு பதில் அவர் கொடுத்த இந்த எண்ணிற்கு அனுப்பியதாக கூறியுள்ளார். இப்போது தான் ஒருபால் ஈர்ப்பு கொண்ட பிரேம்மை, அவரது நண்பர்களில் ஒருவர், ராமநாதபுரம் மாவட்ட போலீசாரின் வாட்ஸப் எண்ணைக் கொடுத்து சிக்க வைத்தது தெரியவந்துள்ளது.

இருப்பினும் ஆபாசமான போட்டோக்களையும், வீடியோக்களையும் அனுப்பிய ஆசிரியர் பிரேம் கிரண் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த ராமநாதபுரம் மாவட்ட போலீசார் காவல்நிலைய ஜாமினில் அவரை விடுவித்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்