'குழி தோண்டி புதைச்சிட்டு இருந்தாரு...' 'கண்டிப்பா கொரோனா தான்...' 'புதைச்ச இடத்துல போனப்போ தான் உண்மை தெரிஞ்சுது...' பரபரப்பு சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருப்பூரில் தன் இறந்த நாயை குழி தோண்டி புதைத்த ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை அடக்கம் செய்ய குழி தொண்டியதாக உருவாகிய வதந்தியால் பதறியுள்ளனர் அப்பகுதி மக்கள்.
திருப்பூர் நொய்யல் ஆற்றின் ஓரத்தில் காரில் வந்து இறங்கிய மர்மநபர் ஒருவர் நீலநிற துணியால் சுற்றிய ஒன்றை மண்ணில் புதைத்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த பெண், கொரோனாவால் உயிரிழந்தவரை தான் இப்படி புதைப்பார்கள் என எண்ணி தன் பகுதி மக்களிடம் பதற்றத்துடன் கூறியுள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் அனைவரும் இணைந்து, தங்கள் பகுதியில் மர்மநபர் ஒருவர் யாருக்கும் தெரியாமல் கொரோனா பாதித்தவரை குழி தோண்டி புதைத்ததாக போலீசாருக்கு தெரிவித்துள்ளனர்.
இதனால் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் அப்பகுதியில் இருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் மூலம் மர்மநபர் வந்த கார் எண்ணை கண்டுபிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நொய்யல் ஆற்றிற்கு வந்த அந்த நபர் திருப்பூர் ராயபுரம் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவரது வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் உடல் நலக்குறைவால் இறந்துள்ளது. அதனால் அவரது நாயை நீலநிற துணியால் சுற்றி, பெத்திசெட்டிபுரம் பகுதியில் குழி தோண்டி புதைத்ததும் தெரியவந்தது.
மேலும் நாய் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்ற போலீசார், அந்த புதைத்த இடத்தை பார்வையிட்டதில் சிறிய அளவிலான குழிதான் தோண்டப்பட்டிருந்தது எனவும், அவர் தன் நாயை தான் புதைத்துள்ளார் எனவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனால் ஒரு விதத்தில் அப்பகுதி மக்கள் சந்தோசம் அடைந்திருந்தாலும், கொரோனா பாதித்தவரை புதைத்ததுள்ளார் என தேவையில்லாத வதந்தியையும் உருவாக்கியுள்ளனர் பெத்திசெட்டிபுர பகுதி மக்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ரெண்டு வைரஸையும் அடிச்சு ஓட விட்ருக்காங்க...' 'மன தைரியத்தை பாராட்டி கைத்தட்டி ஆரவாரம் செய்த மருத்துவர்கள்...' 107 வயது பாட்டியின் கதை...!
- மேலும் '2 வாரங்களுக்கு' ஊரடங்கை நீட்டிக்கிறோம்... அதிரடி அறிவிப்பை 'வெளியிட்ட' மாநிலம்!
- தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா தொற்று!.. சென்னையில் கிடுகிடுவென உயர்ந்த எண்ணிக்கை!. முழு விவரம் உள்ளே!
- கொரோனாவ விட இதுதான் ரொம்ப 'கொடுமையா' இருக்கு... '700 பேர் உயிரிழப்பு'... 100 பேருக்கு 'பார்வை' பறிபோனது!
- ஒரே மாதத்தில் 3 ஆயிரம் பேர் பலி!.. கொரோனா ஊரடங்கு காலத்தில்... அரசாங்கத்தை விரட்டும் அட்டூழியம்!.. அலறும் மெக்சிகோ!
- 'சென்னையில் உணவு டெலிவரி பாய்க்கு கொரோனா'... 'எந்த வீட்டிற்கு எல்லாம் டெலிவரி'... கணக்கெடுப்பு தீவிரம்!
- 'துளிர்த்த நம்பிக்கை'... 'சென்னை மக்களுக்கு பாசிட்டிவ் செய்தி'... கொரோனா தொற்றில்லா இடமாக மாறிய மண்டலம்!
- அறிவுரை வழங்கிய முதலமைச்சர்!.. அணிவகுத்து நின்ற தூய்மை பணியாளர்கள்!.. என்ன காரணம்?
- "தமிழகத்தன் 6 மாநகராட்சிகளில் மீண்டும் பழைய ஊரடங்கு!"... "இன்று ஒருநாள் மட்டும் மாலை 5 மணி வரை கடைகள் இருக்கும்!.. குவியும் மக்கள்!
- 'சென்னையில் சூப்பர் மார்க்கெட் ஓனருக்கு கொரோனா'... 'ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு பாதிப்பு'... கடைக்கு போனவங்க லிஸ்ட் எடுக்கும் பணி தீவிரம்!