அரசு பள்ளிகளில் திரையிடப்படும் "தி ரெட் பலூன்" படம்... தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு.. முழுவிபரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நாளை (அக்டோபர் 13 ஆம் தேதி), தி ரெட் பலூன் திரைப்படம் திரையிடப்பட இருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | சிவன் வேடமிட்டு நடித்த நபர்.. மேடையிலேயே நடந்த அதிர்ச்சி சம்பவம்.. நெஞ்சை உறையவைக்கும் வீடியோ..!

திரைப்படம்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பாடங்கள் மட்டும் அல்லாது, திரைத்துறை பற்றியும் அதன் நுணுக்கமான செயல்பாடுகள் குறித்தும் அறிந்துகொள்ளும் வகையில் புதிய முயற்சியை தமிழக அரசு எடுத்துள்ளது. குறிப்பாக கலை, இலக்கியம், இசை, நாடகம், ஓவியம் உள்ளிட்ட கல்வி சாரா செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாதம் தோறும் திரைப்படம் ஒன்றை திரையிட அரசு கடந்த மாதம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகளில் புகழ்பெற்ற ஈரானிய படமான “சில்ரன் ஆஃப் ஹெவன்” திரையிடப்பட்டது.

தி ரெட் பலூன்

மேலும், படம் திரையிடப்படும்போது உலக சினிமா ரசிகர்கள் மற்றும் சினிமா துறையை சேர்ந்த ஆளுமைகள் பள்ளிகளுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தனர். படம் முடிவடைந்த பிறகு அதுகுறித்த விவாதமும் நடைபெற்றது. அந்த வகையில் பிரெஞ்சு மொழியில் வெளியான தி ரெட் பலூன் திரைப்படம் இந்த மாதம் திரையிடப்பட இருக்கிறது. 1956 ஆம் ஆண்டு வண்ணப்படமாக வெளியான, தி ரெட் பலூன்-ஐ ஆல்பர்ட் லாமோரிஸ் இயக்கியிருந்தார். இந்த படம் ஆஸ்கார், BAFTA ஆகிய பல சர்வதேச விருதுகளை வென்றது.

வழிமுறைகள்

இந்நிலையில், 2022-23-ம் கல்வி ஆண்டில் சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் தொடர்பாக பின்பற்ற வேண்டிய கூடுதல் வழிமுறைகள் குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநிலத் திட்ட இயக்குநர் இரா.சுதன் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், படம் திரையிடுவதை கவனிக்கும் பொறுப்பு ஒரு ஆசிரியருக்கு அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் முந்தைய தினமே படத்தை பார்த்துவிட்டு அது குறித்த பின்னணியை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, திரையிடப்பட்ட பிறகு ஒவ்வொரு மாணவர் வாரியாக கற்றல் மதிப்பீடு பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் திரையிடப்படும் இடம் காற்றோட்டமுள்ளதாகவும் சுகாதார வசதிகள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வகுப்பறையில் புரெஜெக்டர் இல்லாத பள்ளிகளில், பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் வாடகைக்கு பெற்று படத்தைத் திரையிட வேண்டும் எனவும் படம் முடிவடைந்த பிறகு அதுகுறித்த கேள்விகளை மாணவர்களிடம் கேட்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read | பையா ஒரு பிளேட் பானிபூரி குடு.. சாலையோர கடையில் பானிபூரியை சுவைத்த யானை.. Tasty வீடியோ..!

THE RED BALLOON, THE RED BALLOON FILM, TN GOVERNMENT SCHOOLS

மற்ற செய்திகள்