'செய்திவாசிப்பாளர் வரதராஜன் மீது...' 'ஐந்து' பிரிவுகளின் கீழ் 'வழக்குப் பதிவு...' 'பெருந்தொற்று' நோய் சட்டத்தின் கீழ் 'நடவடிக்கை...'

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்கு உடனடியாக மருத்துவமனை கிடைக்கவில்லை என்று பேசி சமூகவலைதளங்களில் வீடியோ வெளியிட்ட செய்தி வாசிப்பாளர் வரதராஜன் மீது காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertising
Advertising

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது உறவினருக்கு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி கிடைக்காமல் அவதிப்பட்டதாக பேசி செய்தி வாசிப்பாளர் வரதராஜன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். எனவே, பொதுமக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அதில் வலியுறுத்தியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

பின்னர் வரதராஜன் பேசிய கருத்துகள் தொடர்பாக பதிலளித்த சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ‘சென்னையில் படுக்கை வசதிகள் உள்ளது எனவும் பொய்யான தகவலை பரப்பி வரும் வரதராஜன் மீது பெருந்தொற்று நோய் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கபடும் என்றும் தெரிவித்தார்.

அதனால் மீண்டும் வரதராஜன், ‘நண்பர் கொரோனா சிகிச்சை பெற்று நலமாக இருப்பதாகவும் மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறி வீடியோவை பதிவிட்டார்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அவதூறாக பரப்பி வீடியோ வெளியிட்ட செய்தி வாசிப்பாளர்  வரதராஜன் மீது பொது சுகாதார துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் அளித்த புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார்  5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

153- கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல், 505(1)(b)- உள்நோக்கத்தோடு தவறான தகவல்களை பரப்புதல், தொற்று நோய் தடுப்பு சட்டம், பேரிடர் மேலாண்மை தடுப்பு சட்டம், 188- அரசு ஊழியரால் பிரகடனப்படுத்தப்பட்ட உத்தரவை மதிக்காமல் இருத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்