'பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்'... 'முதல்வர் வேட்பாளர் யார்?'... பாஜக மேலிடப் பொறுப்பாளர் அதிரடி கருத்து!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக, எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் தமிழகச் சட்டமன்ற தேர்தலில், அதிமுக, பாஜக கூட்டணி தொடருமா என பல்வேறு கேள்விகள் நிலவி வந்த நிலையில், தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்ட விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும் அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என்று கூறினர். இதனிடையே எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியே நீடிப்பார் என அக்கட்சி சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.
இந்நிலையில் பாஜக - அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்பதை அதிமுக தெரிவித்து விட்ட நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், “யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பாஜக தலைமை தான் முடிவு செய்யும். முதல்வர் வேட்பாளர் அதிமுக தலைவராக இருப்பினும், அது குறித்தான அறிவிப்பை பாஜக தலைமையே அறிவிக்கும்” எனத் தெரிவித்தார்.
பாஜக தலைவரின் கருத்து கடும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் அதிமுகவினர் பலர் முருகனுக்குப் பதிலளிக்கும் விதமாக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று உறுதியாகக் கூறினர். சமீபத்தில் நடந்த அதிமுக கூட்டத்திலும் முதல்வர் வேட்பாளர் குறித்து அதிமுக, தன்னுடைய உறுதியைப் பதிவு செய்திருந்தது. இந்த சூழ்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, ''தேர்தல் வெற்றிக்குப் பின், முதல்வர் வேட்பாளரைத் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுதான் கூடி முடிவெடுக்கும்.'' எனத் தெரிவித்துள்ளார்.
சி.டி.ரவியின் இந்த கருத்து தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாஜக தலைவர்கள் சிலர் அதிமுக அரசை விமர்சித்து வரும் நிலையில், சி.டி.ரவியின் இந்த கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
'உடம்பு வலிக்கு ஏற்ற மசாஜ்'... 'மக்களிடையே செம டிமாண்ட்'... 'வைரலாகும் பாம்பு மசாஜின் ரகசியம் என்ன'?
தொடர்புடைய செய்திகள்
- VJ சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்... முதலமைச்சர் தனிப்பிரிவில் சித்ராவின் தாய் முறையீடு! - என்ன நடந்தது???
- ‘நிறைவேறிய கால் நூற்றாண்டு கனவு’.. தமிழகத்தில் உதயமான 38-வது புதிய மாவட்டம்.. மகிழ்ச்சியில் மக்கள்..!
- "இடையில் புகுந்து பலன் பெறலாம் என நினைகிறார்கள்..!!!" - 'அதிரடி சவால்... ஆவேச பேச்சு'... கூட்டணி கட்சிகளுக்கும் 'எச்சரிக்கை' விடுத்த... அதிமுக தலைவர்கள்...!!!
- தமிழக அரசின் பொங்கல் பரிசு மற்றும் ரூ.2500 பணம்.. பெறுவதற்கான 'டோக்கன்' பற்றிய முக்கிய தகவல்!
- திடீரென பாஜகவில் இணைந்த ‘மநீம’ கட்சியின் முக்கிய நிர்வாகி.. என்ன காரணம்..? பரபரக்கும் அரசியல் களம்..!
- VIDEO: 'தந்தை பெரியார், எம்ஜிஆர் நினைவு நாள்'... கருப்பு சட்டை அணிந்து... முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை!
- 'டிசம்பர் 31ந்தேதியுடன் முடியும் ஊரடங்கு'... 'புதுசாக பயமுறுத்தும் கொரோனா'... 'மருத்துவ குழுவுடன் ஆலோசனை'... என்ன முடிவுகள் வெளியாகும்?
- "உழந்தும் உழவே தலை!".. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெகிழ வைக்கும் ட்வீட்!
- “நாங்கள் ஆட்சிக்கு வந்தால்... இல்லத்தரசிகளுக்கு அரசு சம்பளம் கொடுப்போம்...!” - அதிரடி அறிவிப்புகள் வெளியிட்ட தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சி! - யாரு சாமி அவங்க???
- 'பொங்கல் பரிசாக ரூ 2500!!!'... 'யாருக்கெல்லாம் கிடைக்கும்?... எப்போதிருந்து வழங்கப்படும்???'... 'முதலமைச்சர் அறிவிப்பு!'...